ETV Bharat / bharat

புதுச்சேரி சர்வதேச கிரிக்கெட் மைதான விவகாரம்: டி-20 போட்டிகள் ரத்து!

author img

By

Published : Nov 21, 2020, 4:42 PM IST

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பிசிசிஐ நிர்வாகத்திற்கு அளித்த புகாரின் அடிப்படையில், வரும் 27ஆம் தேதி வரை நடக்கவிருந்த டி-20 கிரிக்கெட் போட்டிகள் ரத்துசெய்யப்பட்டன.

புதுச்சேரி சர்வதேச கிரிக்கெட் மைதானம்
புதுச்சேரி சர்வதேச கிரிக்கெட் மைதானம்

புதுச்சேரி மாநிலம் துத்திப்பட்டு சர்வதேச கிரிக்கெட் மைதானம், அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. அத்துடன் மைதானங்கள் அமைக்க அங்குள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகாவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவின்பேரில், அலுவலர்கள் சேதராப்பட்டு காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். மேலும் மைதான நிர்வாகம் பல முறைக்கேடுகளில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மைதானத்தில் மின்துறை மற்றும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சூழ்நிலையில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பிசிசிஐ நிர்வாகத்திற்கு புகார் மனு அளித்துள்ளார். அதனடிப்படையில், வரும் 27ஆம் தேதி வரை நடக்கவிருந்த டி-20 போட்டிகள் திடீரென ரத்துசெய்யப்பட்டுள்ளன. அதனால் 100-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் வீரர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் ரிசர்வ் பட்டாலியன் காவல் துறையினருக்குப் பாதுகாப்புப் பயிற்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.