ஐதராபாத்: 2025ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் இந்திய வீரர்களுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை போனஸ் தொகையாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெய்ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஐபிஎலில் நிலைத்தன்மை மற்றும் சாம்பியன், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர்களை கொண்டாடும் ஒரு வரலாற்று நடவடிக்கையாக, கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு ஆட்டத்திற்கு 7.5 லட்ச ரூபாய் போட்டிக் கட்டணத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
ஒரு சீசனில் அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடும் கிரிக்கெட் வீரர், அவர் ஒப்பந்தம் செய்த தொகைக்கு கூடுதலாக 1.05 கோடி ரூபாய் பெறுவார். ஒவ்வொரு அணியும் சீசனுக்கான போட்டிக் கட்டணமாக 12.60 கோடி ரூபாயை ஒதுக்கும். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் வீரர்கள் மற்றும் அணிகள் அதிக வருவாயை ஈட்டுவர்" என்று ஜெய்ஷா பதிவிட்டுள்ளார்.
In a historic move to celebrate consistency and champion outstanding performances in the #IPL, we are thrilled to introduce a match fee of INR 7.5 lakhs per game for our cricketers! A cricketer playing all league matches in a season will get Rs. 1.05 crores in addition to his…
— Jay Shah (@JayShah) September 28, 2024
இதையும் படிங்க: வங்கதேச தொடரால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பை இழக்கப் போகும் இந்தியா? எப்படி சாத்தியம்? - 2025 WTC Final