ETV Bharat / bharat

கரோனா நிவாரணம்: ரூ. 50ஆயிரம் வழங்கும் பணியை தொடங்கிய முதலமைச்சர் - pudhucherry cm

புதுச்சேரியில் கரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50ஆயிரம் ரூபாய் வழங்கும் பணியினை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கிவைத்தார்.

pudhucherry-cm-give-50-thousand-rupees-for-the-families-who-victims-of-the-corona-death
கரோனா நிவாரணம்: ரூ. 50ஆயிரம் வழங்கும் பணியை தொடங்கிய முதலமைச்சர்
author img

By

Published : Oct 8, 2021, 12:56 PM IST

புதுச்சேரி: கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50ஆயிரம் ரூபாய் வழங்க தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதவிர புதுச்சேரி அரசு கரோனாவினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 50ஆயிரம் ரூபாய் நிதி வழங்க முன்வந்துள்ளது.

இந்நிதியினை வழங்கும் பணி முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று (அக்.8) நடைபெற்றது. முதலமைச்சர் ரங்கசாமி நோய் தொற்றால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கும் பணியினை தொடங்கிவைத்தார். இதன்மூலம் 1,845 குடும்பஙகள் நிவாரணம் பெறுகின்றன.

இந்நிகழ்வின்போது, பொதுப்பணித்துறை அமைச்சர் லஷ்மிநாராயணன், சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு ஆகியோர் உடனிருந்தனர். அப்போது, முதலமைச்சர் ரங்கசாமி கூறுகையில், "கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 50 ஆயிரம் வழங்கப்படுகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள 50ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

புதுச்சேரியில் இதுவரை 70ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தடுப்பூசி போடாதவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும். நோய் பாதிப்பு வராமல் தடுக்க அவசியம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும். தேவையான தடுப்பூசிகள் சுகாதாரத்துறையில் இருக்கின்றன" என்றார்.

இதையும் படிங்க: கரோனா இழப்பீடு தாமதம் ஏன்? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.