புதுச்சேரி: புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமிக்கு வருகிற ஆகஸ்ட் 4ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
அவரின் பிறந்தநாளையொட்டி ரங்கசாமியின் ஆதரவாளர்களும், நகரம், கிராமங்கள் எனப் பல்வேறு இடங்களில் வித்தியாசமான விளம்பர தட்டிகள் வைத்துள்ளனர்.
'சார்பட்டா' ரங்கசாமி
அவரை நடிகருக்கு இணையாக சித்தரித்து தட்டிகள் வைத்துள்ளனர். ஒவ்வொரு முறையும் ரங்கசாமி பிறந்தநாளின்போது அவரின் ஆதரவாளர்கள், ரங்கசாமியைப் புகழ்ந்து விதவிதமான நடிகர்கள் கெட்டப்பில் தட்டிகள் வைப்பது வழக்கம்.
இந்த முறை அவரை பாகுபலி பிரபாஸ் போலவும், சமீபத்தில் வந்த திரைப்படமான 'சார்பட்டா' ஆர்யாவாகவும், 'காலா' ரஜினியாகவும் என பல கெட்டப்புகளில் ரங்கசாமிக்கு தட்டிகளை வைத்துள்ளனர், அவரது ஆதரவாளர்கள்.
ஒரு அபிமானி உச்சகட்டமாக சென்று, முதலமைச்சர் ரங்கசாமிக்கு நடுக்கடலில் தட்டிவைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: '’தங்கப் பதக்கம் வென்று வாருங்கள்’ - மகளிர் ஹாக்கி அணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து'