ETV Bharat / bharat

மத்திய பிரதேசத்தில் வாட்ச்மேன்களை கொல்லும் சைக்கோ கொலையாளி.. - psycho

மத்திய பிரதேச மாநிலத்தில் மூன்று நாட்களில் அடுத்தடுத்து மூன்று வாட்ச்மேன்கள் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் வாட்ச்மேன்களை கொல்லும் சைகோ கொலையாளி? மக்கள் அச்சம்

author img

By

Published : Sep 1, 2022, 9:49 PM IST

சாகர்: கடந்த மூன்று நாட்களில் மத்திய பிரதேச மாநிலம் சாகர் பகுதியில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் மூன்று வாட்ச்மேன்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது மத்திய பிரதேசத்தில் பீதியை கிளப்பியுள்ளது. மேலும் அவர்களில் இருவர் ஒரே நபரால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபரின் ஓவியத்தையும் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா போபாலில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”முழு காவல்துறை படையும் "உயர் உஷார் நிலையில்" வைக்கப்பட்டுள்ளனர். இரவு பணியில் இருக்கும் வாட்ச்மேன்க்ளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்கள் தொடர்பில் மிக விரைவில் முடிவெடுப்போம்” என அமைச்சர் தெரிவித்தார்.

கொலை சம்பவம் குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விக்ரம் சிங் குஷ்வாஹா கூறுகையில், ” தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த 50 வயதுடைய காவலாளி கல்யாண் லோதி, ஆகஸ்ட் 28-29 இடைப்பட்ட இரவில் கான்ட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தலையில் சுத்தியலால் அடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

கல்லூரியில் பணிபுரிந்து வந்த மற்றொரு வாட்ச்மேன் ஷம்பு நாராயண் துபே (60), ஆகஸ்ட் 29-30 இரவு சிவில் லைன்ஸ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தலையில் கல்லால் அடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

மூன்றாவது வாட்ச்மேன் மங்கள் அஹிர்வார் ஆகஸ்ட் 30-31 இடைப்பட்ட இரவில் மோதி நகர் பகுதியில் கட்டையால் தாக்கி கொல்லப்பட்டார்” என தெரிவித்துள்ளார். மேலும் இந்த கொலைகளை சைகோ கொலையாளி தான் செய்துள்ளார் என கூற இயலாது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அஸ்ஸாமில் குழந்தையை கடத்த முயன்றதாக ஒருவர் அடித்துக் கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.