ETV Bharat / bharat

"நாங்கள் பெருமைப்படுகிறோம்": மருமகன் ரிஷி சுனக்கை வாழ்த்திய இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி - rishi sunak

இங்கிலாந்து பிரதமராக பதவியேற்க உள்ள ரிஷி சுனக்கை இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி வாழ்த்தினார்.

இங்கிலாந்து பிரதமரான தனது மருமகன் ரிஷி சுனாக்கிற்கு இன்ஃபோசிஸ் துணை நிறுவனர் வாழ்த்து

author img

By

Published : Oct 25, 2022, 9:44 AM IST

டெல்லி: இந்திய வம்சாவளியினைச் சார்ந்த ரிஷி சுனக்(42) இங்கிலாந்தின் பிரதமராக இன்று (அக். 25) பதவியேற்க உள்ளார். அவருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் ஆனந்த் மகேந்திரா உள்ளிட்ட தொழிலதிபர்களும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், இன்ஃபோசிஸ் இணை நிறுவனரும், ரிஷி சுனக்கின் மாமனாருமான நாராயண மூர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “ரிஷிக்கு வாழ்த்துகள். நாங்கள் பெருமையடைகிறோம். அவர் மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறோம். அவர் நிச்சயம் பிரிட்டன் நாட்டு மக்களுக்கு நல்லதைச் செய்வார்" எனத் தெரிவித்துள்ளார். இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியை சுனக் 2009ஆம் ஆண்டு மணந்தார். இவர்களது திருமணம் பெங்களூருவில் உள்ள லீலா பேலஸில் பாரம்பரிய முறைப்படி நடந்தது. இந்த தம்பதியருக்கு கிருஷ்ணா(11), அனுஷ்கா(9) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

"நாங்கள் பெருமைப்படுகிறோம்": மருமகன் ரிஷி சுனக்கை வாழ்த்திய இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி

டெல்லி: இந்திய வம்சாவளியினைச் சார்ந்த ரிஷி சுனக்(42) இங்கிலாந்தின் பிரதமராக இன்று (அக். 25) பதவியேற்க உள்ளார். அவருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் ஆனந்த் மகேந்திரா உள்ளிட்ட தொழிலதிபர்களும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், இன்ஃபோசிஸ் இணை நிறுவனரும், ரிஷி சுனக்கின் மாமனாருமான நாராயண மூர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “ரிஷிக்கு வாழ்த்துகள். நாங்கள் பெருமையடைகிறோம். அவர் மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறோம். அவர் நிச்சயம் பிரிட்டன் நாட்டு மக்களுக்கு நல்லதைச் செய்வார்" எனத் தெரிவித்துள்ளார். இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியை சுனக் 2009ஆம் ஆண்டு மணந்தார். இவர்களது திருமணம் பெங்களூருவில் உள்ள லீலா பேலஸில் பாரம்பரிய முறைப்படி நடந்தது. இந்த தம்பதியருக்கு கிருஷ்ணா(11), அனுஷ்கா(9) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

இதையும் படிங்க: இங்கிலாந்தின் பிரதமராகும் ரிஷி சுனக் - பிரதமர் மோடி, ஆனந்த் மகேந்திரா வாழ்த்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.