கர்னால் (ஹரியானா) : ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை இரத்து செய்யக்கோரி விவசாயிகள் டெல்லி உள்பட நாடு முழுக்க தொடர் போராட்டங்கள் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் இன்று (ஆக.28) விவசாயிகள் ஹரியானா மாநில பாஜக தலைவர் ஒபி தன்கரை எதிர்த்து கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கர்னால் டோல்கேட் அருகே தன்கர் காரை வழிமறித்து அவரின் காரை குச்சிகளால் தாக்கினார்கள். இதையடுத்து காவலர்கள் விவசாயிகள் மீது தடியடி நடத்தினார்கள்.
முதலமைச்சர் எம். மனோகர் லால் கட்டார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள தன்கர் காரில் சென்றார். அப்போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
முன்னதாக இது குறித்து பேசிய மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நிஷாந்த் குமார், “விவசாயிகளின் தலைவர்களுடன் சுமூக பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம். யாரேனும் சட்டம் ஒழுங்கை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க : வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் - அதிமுக, பாஜக வெளிநடப்பு