புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால், மக்களுக்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியவில்லை எனக் கூறி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதனால், எவ்வித மாற்றமும் நிகழவில்லை.
மீண்டும் போராட்டம்
இந்நிலையில், மீண்டும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து வரும் 8 ஆம் தேதி முதல் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
முன்னதாக முதலமைச்சர் நாராயணசாமி அலுவலகத்தில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்க கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டம், ராஜ் நிவாஸ் முன்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புதுச்சேரி கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை