இந்திய சினிமாவின் பீனிக்ஸ் பறவை என்று சொல்லப்படும் கன்னட நடிகர் விஷ்ணுவர்தன் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். தனது நடிப்பால் இன்றளவு பல ரசிகர்களை தன்பக்கம் வைத்திருக்கும் விஷ்ணுவர்தன், கடந்த 2009ஆம் ஆண்டு தன்னுடைய 59ஆவது வயதில் காலமானார்.
இந்நிலையில் பெங்களூரு மாகடி ரோடு டோல்கேட்டில் இருந்து பைப்லைன் செல்லும் சாலையில் இருந்த விஷ்ணுவர்தன் சிலையை அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று முன்தினம் (டிச.26) உடைத்துள்ளனர். இதில் அவரின் சிலை இரண்டாக துண்டானது.
இதனையடுத்து இதுகுறித்து தகவலறிந்த அவரின் ரசிகர்கள் சிலையை உடைத்தவர்களை கண்டித்தும், அவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கன்னட நடிகர் தர்ஷன் ட்வீட் செய்துள்ளார். அதில், “அவர் எங்களின் இதயத்தில் வாழ்கிறார். அவர் எங்களின் குரு. எங்களின் குருவை இப்படி அவமதிக்க யாருக்கும் உரிமையில்லை. அதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க...ரஜினியிடம் உடல்நலம் குறித்து விசாரித்த முதலமைச்சர்!