புதுச்சேரியில் பணிபுரியும் தமிழ் பேசும் அலுவலர்களை மாற்றி அந்த பதவியில் வடநாட்டு அலுவலர்களை துணைநிலை ஆளுநர் நியமித்து வருவதாக பல்வேறு அமைப்புகள் குற்றச்சாட்டுகள் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், புதுச்சேரி உரிமை பாதுகாப்பு கூட்டு இயக்கம் சார்பில் தமிழ் மொழி பேசும் அலுவலர்களை நியமிக்க வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்து. புதுச்சேரி தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இப்போராட்டத்தில் அக்கூட்டமைப்பு தலைவர் சுவாமி நாதன் தலைமையேற்றார். இதில், துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
எதற்காக போராட்டம்?
புதுச்சேரியில் பணிபுரியும் தமிழ் பேசும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்களை திடீரென மாற்றம் செய்து, அதற்கு பதிலாக வட மாநிலங்களில் உள்ள அலுவலர்களை நியமிப்பதை ஆளுநர் கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கொட்டும் மழையைக் கூட பொருட்படுத்தாமல் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டோம் - மாஸ் காட்டும் மம்தா