ETV Bharat / bharat

அதிர்ச்சி: மாதவிடாய் கறைக்கு அபராதம் விதித்த ஹோட்டல்! - மாதவிடாய் கறைக்கு அபராதம் விதித்த மேற்கு வங்க ஹோட்டல்!

மேற்கு வங்காளத்தில் ஹோட்டலில் தங்கியிருந்த பெண் வாடிக்கையாளருக்கு போர்வையில் மாதவிடாய் கறை இருந்ததாக கூறி ஹோட்டல் நிர்வாகம் அபராதம் விதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாதவிடாய்
மாதவிடாய்
author img

By

Published : May 10, 2022, 10:42 AM IST

கொல்கத்தா: மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு இன்றைய காலத்து மக்களிடையே பரவலாக ஏற்பட்டுள்ளது. தொண்டு நிறுவனங்கள், அரசு மேற்கொண்ட முயற்சியால் அனைவரும் தெரிந்து வைத்துக் கொள்ளகூடிய ஒன்றாக மாறியிருக்கிறது. பலரும் இது குறித்து பொதுவெளியில் பேசத் தொடங்கியுள்ளனர். முன்பு இருந்ததுபோல் இல்லாமல் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே நன்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்கா ஹோட்டலில் தங்கியிருந்த பெண் வாடிக்கையாளருக்கு போர்வையில் மாதவிடாய் கறை இருந்ததாக கூறி ஹோட்டல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் மேற்கு மேதினிபூரில் ஹோட்டல் புக்கிங் ஆப் மூலம் பெண் ஒருவர் ஹோட்டல் அறை முன்பதிவு செய்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு (மே 8) உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு அன்று இரவு மேற்கு மேதினிபூரில் முன்பதிவு செய்த ஹோட்டல் அறையில் கல்லூரி பேராசிரியையான அந்த பெண் தங்கி உள்ளார்.

திங்கள்கிழமை (மே 9) காலை ஹோட்டலில் இருந்து செக் அவுட் செய்த போது, கூடுதலாக 400 ரூபாய் பில்லில் சேர்க்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது, போர்வையில் மாதவிடாய் கறை இருந்ததாக தெரிவித்து, இதை துவைத்து பயன்படுத்த முடியாது என கூறி கூடுதல் தொகை விதித்ததாக கூறியுள்ளனர்.

இகுறித்து அந்த பெண் கூறுகையில், "ஹோட்டல் அலுவலர்களை நான் தொடர்பு கொண்டு கேட்டேன் அப்போது, அறையில் தங்கியிருப்பவர்களால் ஹோட்டல் பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நபரிடம் பணம் வசூலிக்கப்படும் என்பது ஹோட்டல் விதிமுறைகளில் உள்ளது. போர்வையில் கறை இருந்தது, அதைத் துவைத்து பயன்படுத்த முடியாது. பல ஆண்டுகளாக இந்த தொழிலில் உள்ளோம். எந்தக் கறை துவைக்க முடியும், எது துவைக்க முடியாது என தெரியும். அதனால் கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டது" என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து அந்த பெண் பேசுகையில், அந்த கறைக்கு பதிலாக தக்காளி கெட்ச்அப் அல்லது வேறு ஏதேனும் ஏற்பட்டிருந்தால் என்னிடம் கூடுதல் பணம் வசூலித்திருப்பார்களா? உடல்நிலை சரியில்லாமல் நான் வாந்தி எடுத்திருந்தால், அப்போதும் என்னிடம் பணம் வசூலித்திருப்பார்களா? என கேட்டு, இது இயற்கையானது, இந்த காரணத்திற்காக வாடிக்கையாளர்களிடம் கூடுதல் பணம் வசூலிக்க கூடாது என்றார்.

இதையும் படிங்க: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி திணிப்புக்கு எதிராக போராடிக் கைதான 4 திமுக எம்எல்ஏக்கள் விடுதலை

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.