ETV Bharat / bharat

அஸ்ஸாமில் 6 இடங்களில் பிரியங்கா காந்தி பரப்புரை! - public meetings in Assam

டெல்லி: சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அஸ்ஸாமில் ஆறு இடங்களில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.

Priyanka gandhi
பிரியங்கா காந்தி
author img

By

Published : Mar 20, 2021, 5:26 PM IST

126 தொகுதிகளைக் கொண்ட அஸ்ஸாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தல் மார்ச் 27ஆம் தேதி தொடங்குகிறது. இதனால், தேர்தல் பரப்புரை பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அஸ்ஸாம் மாநிலத்தில் வரும் மார்ச் 21, 22ஆம் தேதிகளில், ஆறு இடங்களில் பரப்புரை மேற்கொள்கிறார்.

கிடைத்த தகவலின்படி, மார்ச் 21ஆம் தேதியன்று, ஜோர்ஹாட், நசிரா, கும்தா ஆகிய மூன்று பகுதிகளில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்கிறார். அடுத்த நாள், ஷருபதர், கலியாபோர், நாகான் தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்கிறார். இம்மாத தொடக்கத்திலும், அஸ்ஸாமில் பிரியங்கா காந்தி பரப்புரை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

அவர் ஐந்து வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்துள்ளார். அதாவது, குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து, ஐந்து லட்சம் பேருக்கு அரசு வேலை, தேயிலை பறிப்போரின் தினக்கூலி 167 லிருந்து 365ஆக அதிகரிப்பு, 200 யூனிட் வரை இலவச மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க: சென்னைக்கு வருகிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.