உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2022ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி இப்போதே முன்னெற்பாடுகளை மேற்கொண்டுவருகிறது. வரப்போகும் தேர்தலில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசை வீழ்த்த காங்கிரசின் முக்கிய முகமாக பிரியங்கா காந்தியை அக்கட்சி முன்னிறுத்தவுள்ளது.
"மிஷன் உத்தரப் பிரதேசம்" என்ற முழக்கத்துடன் வரும் பிப்ரவரி மாதம் முதல் அங்கு தேர்தல் வேலைகளைத் தொடங்கவுள்ள பிரியங்கா காந்தி கட்சியை பஞ்சாயத்து நிலையிலிருந்து பலப்படுத்த திட்டமிட்டுள்ளார். மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள், கட்சியின் மாவட்ட தலைவர்களிடம் முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர்.
2022ஆம் ஆண்டு தேர்தலுக்காகவே உத்தரப் பிரதேசத்தில் உள்ள லக்னோவில் முகாமிடப்போகும் பிரியங்கா, கட்சியின் செயல்பாடுகளை குழுவாரியாக தொடர்ந்து கண்காணிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
அங்கு மாவட்ட அளவில் பசு பாதுகாப்பு யாத்திரையை அக்கட்சி தொடங்கியுள்ளது. அங்குள்ள முன்னேறிய வகுப்பு வாக்குகளை குறிவைத்தே இந்த பசு யாத்திரை திட்டத்தை காங்கிரஸ் மேற்கொண்டுவருகிறது.
இதையும் படிங்க: விவசாயிகள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டோம் - ரிலையன்ஸ்