லக்னோ: உத்தரப் பிரதேச ஆக்ரவாவில் அருண் வால்மீகி என்னும் தூய்மை தொழிலாளர் போலீஸ் காவலில் (Lockup Death) கடந்த அக்டோபர் 20ஆம் தேதி உயிரிழந்தார்.
ஆக்ராவின் ஜெக்தீஸ்புரா காவல் நிலையத்தில் பாதுகாப்பு அறையில் இருந்து ரூ.25 லட்சம் திருடிவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணைக்காக காவலில் எடுக்கப்பட்டார். அவர் அந்த காவல் நிலையத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார்.
பொய் குற்றச்சாட்டு
அருண் வால்மீகி உயிரிழப்பிற்கு (Agra Custodial Death) மறுநாள் (அக். 21) காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அவரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது, அருணின் 70 வயதான தாயார் கமலா தேவி, மனைவி சோனம் ஆகியோர் அருண் காவல் நிலையத்தில் இருந்து பணத்தை திருடவில்லை என்றும் காவலர்களே பணத்தை திருடிவிட்டு, அருண் மீது பழி சுமத்தியதாகவும் பிரியங்கா காந்தியிடம் தெரிவித்தனர்.
காவல்துறையினரின் மிரட்டல்
மேலும், காவலர்கள் தங்களை ஐந்து நாள்கள் காவல் நிலையத்திலேயே அடைத்துவைத்திருந்ததாகவும், வீட்டை விற்று அல்லது கடன் பெற்றாவது 25 லட்ச ரூபாய் கொண்டு வரவேண்டும் என தங்களை மிரட்டியதாகவும் குற்றஞ்சாட்டினார். அப்படி கொடுக்காவிட்டால் அனைவரையும் சிறையில் அடைத்துவிடுவோம் என மிரட்டியதாகவும் கூறினர்.
அப்போது, அருணின் குடும்பத்தினரின் சட்டப்போரட்டத்திற்கு தான் உதவி புரிவதாகவும், நிவாரணமாக ரூ. 30 லட்சம் வழங்கவதாகவும் உறுதியளித்தார்.
சொன்னபடி செய்த பிரியங்கா
இது குறித்து பிரியங்கா, "அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்காமல், அவர்களை தாக்குகிறது.
போலீஸ் காவலில் உயிரிழந்த அருண் வால்மீகிக்கு நீதி வழங்க உத்தரப் பிரதேச அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. நீதியின் குரலை நசுக்க விடமாட்டேன்" எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், பிரியங்கா காந்தி முன்னர் கூறியபடி அருண் வால்மீகியின் குடும்பத்தாருக்கு ரூ. 30 லட்சத்திற்கான காசோலையை இன்று (நவ.18) வழங்கினார்.
இதையும் படிங்க: Hyderpora encounter: நீதி விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் உத்தரவு