மேற்கு வங்கம்: மலேரியா நோய் தொற்றுப்பண்புடைய ஒரு தொற்றுநோய். இவை பொதுவாக அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்க போன்ற பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 300 முதல் 500 மில்லியன் வரையிலான மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 20 சதவீத மக்கள் சிகிச்சை பலன் இன்றி உயிரிழக்கின்றனர்.
சுகாதாரத்திற்கு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது மலேரியா. மலேரிய பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணி வகைகளால் ஏற்படும் நோய். பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபாரம் (Plasmodium falciparum), பிளாஸ்மோடியம் விவக்ஸ் (Plasmodium vivax), பிளாஸ்மோடியம் ஓவலே (Plasmodium ovale), பிளாஸ்மோடியம் மலேரியா (Plasmodium malariae) மற்றும் பிளாஸ்மோடியம் நோலெசி (Plasmodium knowlesi) என்னும் ஐந்து வகைக்ளை உள்ளடக்கியது தான் பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணி.
இதில், கடுமையான தன்மைக் கொண்டது பிளாஸ்மோடியம் மலேரியா (Plasmodium malariae). இதனால் மக்கள் பெரும் அளவில் பாதிப்படைகின்றனர். செப்டம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலங்களில் இவை அதிகமாக காணப்படும். பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபாரம் (Plasmodium falciparum), பிளாஸ்மோடியம் விவக்ஸ் (Plasmodium vivax), பிளாஸ்மோடியம் ஓவலே (Plasmodium ovale) போன்ற வகைகள், மனிதர்களுக்கு லேசான நோய் தொற்றை ஏற்படுத்துகிறது. இவைகளுக்கு மனிதர்களை கொல்லும் சக்தி இல்லை. பிளாஸ்மோடியம் நோலெசி (Plasmodium knowlesi) குட்டை வால் குரங்குகளை தாக்கும் நோயாக திகழ்கிறது.
பொதுவாக, அனாஃபிலிஸ் (Anopheles) என்னும் பெண் கொசு மனிதர்களை கடிப்பதன் மூலம் மலேரியா நோய் ஏற்படுகிறது. இந்த நோயை கட்டுபடுத்துவதற்க்கு மருந்துகள் கண்டறியப்பட்டலும், அதனை முற்றிலும் போக்கும் வகையில், இன்றும் மருந்துகள் அறியப்படவில்லை. நோய் தொற்று அதிகம் இருக்கும் பகுதியில் வாழும் மக்கள் ப்ரோஃபிலாக்டிக் (prophylactic) என்னும் நோய் தடுப்பு மருந்தினை செலுத்திக்கொள்கின்றனர். மேலும் ஆர்ட்டெமிசினின் (Artemisinin), குளோரோகுயின் (Chloroquine) என்னும் மருந்துகளையும் செலுத்திக்கொள்கின்றனர்.
இந்நிலையில், தற்போது மலேரியாவுக்கு புதிய மருத்து கண்டறியப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டம், ஆஸ்திரேலியாவில் செய்யப்பட்டது. ஏனெனில் இந்தியாவை போலவே அங்கும், இரண்டு வகையான மலேரியாவின் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. தற்போது கண்டறியப்பட்டுள்ள மருந்து, பழைய மருந்துகளை விட அதிக பயனுள்ளதாக இருக்கும் என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள். இந்திய மருத்துவக் கழகம் சார்பில், தற்போது இந்தியாவில் ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மருத்துவர் டெபாஷிஸ் சாட்டர்ஜி கூறுகையில், “தற்போது ஆர்ட்டெமிசினின் (Artemisinin), குளோரோகுயின் (Chloroquine) என்ற மருந்துகளை மலேரியாவை தடுப்பதற்காக பயன்படுத்துகின்றனர். இவை அனைத்தும் 1970-களில் கண்டறிப்பட்ட மருந்துகள். இவை அனைத்தும் தற்போதைய மனித உடலுக்கு குறைவான ஆற்றலையே வழங்குகிறது.
இவை மனித உடலில் நோய் எதிர்ப்பு சத்தியை குறைப்பதோடு, இதய நோயை உண்டாக்கி, அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. இதனை கருதி புதிய மருந்துகள் வருகின்றன. உள்நாட்டு மருந்து நிறுவனம் ஒன்று எங்களிடம் இரண்டாம் கட்ட சோதனையைத் தொடங்க உள்ளது. முன்னதாக, இந்த மருந்தின் சோதனை ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்டது” என்றார்.
இதனைத்தொடர்ந்து தடுப்பூசி சோதனை வசதியாளர் சினேந்து கோனார் கூறுகையில், “இந்த தடுப்பூசி சோதனை ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் செய்யப்பட்டது. இந்தியாவைப் போலவே, இந்த இரண்டு வகையான மலேரியாவின் பாதிப்பும் அங்கு அதிகம் காணப்படுகிறது. தடுப்பூசி சோதனையின் முடிவு நன்றாக உள்ளது என கூறப்படுகிறது. விரைவில் மேற்கு வங்கத்தில் சோதனை தொடங்க உள்ளது.
இந்த சோதனை நில் ரத்தன் சிர்கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் டிராபிகல் மெடிசின் மருத்துவமனையில் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. மொத்தம் 145 பேரிடம் 43 நாட்களுக்கு இந்த சோதனை நடத்தப்படும். உள்நாட்டு மருந்து என்பதால், மருந்தின் விலை மிகவும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.