கொல்கத்தா (மேற்கு வங்கம்): கிட்டத்தட்ட 45 நாள்கள் ஊரடங்கு முடிந்த மேற்கு வங்கத்தில் ஜுலை 1ஆம் தேதி முதல் பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
தனியார் பேருந்துகள் இயங்க மறுப்பு
கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி 50 விழுக்காடு பயணிகளுடன் மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும் என அம்மாநில அரசு கூறியுள்ளது. இந்நிலையில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றி குறைந்த பேருந்துக் கட்டணத்தில் தங்களால் பேருந்துகளை இயக்க முடியாது எனக்கூறி தனியார் நிறுவனங்கள் பேருந்துகளை இயக்க மறுத்து விட்டன.
அரசு பேருந்துகள் முண்டியடித்து பயணிக்கும் மக்கள்
இதனிடையே, ஜூலை 1ஆம் தேதி அம்மாநிலத்தில் பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டு, அரசு பேருந்துகள் முழு வீச்சில் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும், தனியார் பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தால் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல் அரசு பேருந்துகளில் மக்கள் முண்டியடித்துக் கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கொல்கத்தா முதல் சிலிகுரி வரை, பிர்பூம் முதல் வடக்கு தினாஜ்பூர் வரை கூட்டம் பேருந்துகளில் கூட்டம் அலைமோதும் புகைப்படங்கள் வெளியாகி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
காற்றில் பறந்த கரோனா வழிகாட்டு நெறிமுறைகள்
வடக்கு பெங்கால் தொடங்கி சிலிகுரி வரை எட்டு மாவட்டங்களுக்கு சாதாரண நாள்களில் மொத்தம் ஆறாயிரம் பேருந்துகள் இயக்கப்படும். தற்போது தனியார் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், வெறும் 500 அரசு பேருந்துகளே இயக்கப்படுகின்றன.
தனியார் பேருந்துகள் இயக்கப்படாத இச்சூழலில், அரசு பேருந்துகளின் மீதான அழுத்தம் அதிகரித்து மக்கள் கூட்டம் முண்டியடித்துச் செல்லும் நிலை அம்மாநில மக்களிடையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: ட்விட்டர் தளம் மத வெறுப்பை பரப்புவதாக மேலும் ஒரு புகார்!