தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடவுள்ளார். இன்று காலை ஜம்முவிற்கு செல்லும் பிரதமர் மோடி, இந்திய-பாகிஸ்தான் எல்லையான நொஷேரா பகுதியில் உள்ள ரஜோரி பகுதியில் ராணுவ வீரர்களை சந்திக்கிறார்.
பிரதமரின் வருகையை ஒட்டி அங்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமருடன் ராணுவ தலைவர்கள், உயர் அலுவலர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.
பிரதமராகப் பொறுப்பேற்ற பின், மோடி ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அக்டோபர் மாதம் முழுவதும் ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து பயங்கரவாதத் தாக்குதலும், ராணுவ மோதல்களும் நடந்த வண்ணம் இருந்தன.
இதையடுத்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா அன்மையில் ஜம்மு காஷ்மீர் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.10 விலை குறைப்பு - மத்திய அரசு அதிரடி