ETV Bharat / bharat

"இந்தியாவில் இருந்து கர்நாடகாவை பிரிக்க காங்கிரஸ் முயற்சி" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு! - பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்

இந்தியாவில் இருந்து கர்நாடகாவை பிரிக்க நினைக்கும் காங்கிரசின் எண்ணத்திற்கு மே 10 ஆம் தேதி மக்கள் பதிலளிப்பார்கள் என பிரதமர் மோடி கூறினார்.

Karnataka Election
Karnataka Election
author img

By

Published : May 7, 2023, 10:55 PM IST

பெங்களூரு : இந்தியாவில் இருந்து கர்நாடகாவை பிரிக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வருவதாக பிரதமர் மோடி கூறினார். 224 தொகுதிகளை கர்நாடக சட்டமன்றத்திற்கு மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில் கடைசி கட்ட அதிதீவிர பிரசாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டன. பாஜக சார்பில் பிரதமர் மோடி பெங்களுரூவில் பிரம்மாண்ட ரோடு ஷோ நிகழ்த்தினார்.

வழிநெடுக பிரதமர் மோடி மீது பூக்களை தூவி மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, நாட்டில் இருந்து கர்நாடகாவை பிரிக்க வேண்டும் என்ற முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபடுவதாக வெளிப்படையாக குற்றஞ்சாட்டினார்.

கர்நாடகவின் நற்பெயருக்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்த யாரையும் அனுமதிக்காது என்று காங்கிரஸ் கூறியதாகவும், தேச விரோத சக்திகள் காங்கிரஸின் உயர்மட்டத்தை எட்டி உள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார். இந்தியாவின் நலன்களுக்கு எதிராக செயல்படும் போது, காங்கிரஸின் குடும்பம் முன்னணியில் இருக்கும் என்றார்.

மேலும் தான் இங்கு ஒரு தீவிரமான விஷயத்தைப் பற்றி பேச விரும்புவதாகவும் தன் இதயத்தில் நிறைய வலிகள் இருப்பதால் அதைச் சொல்ல விரும்புவதாகவும் அவர் கூறினார். காங்கிரஸ் குடும்பம், நாட்டின் அரசியலில் செல்வாக்கு செலுத்த, வெளிநாட்டு சக்திகளை தலையிட ஊக்குவிப்பதாக பிரதமர் மோடி கூறினார்.

இந்தியாவை வெறுக்கும் வெளிநாட்டு தூதர்களை காங்கிரஸ் ரகசியமாக சந்திப்பதாகவும், தேசத்தின் இறையாண்மையை அவமதிக்கும் செயல்களில் மீண்டும் மீண்டும் ஈடுபடுவதாகவும், அதற்காக அவர்கள் வெட்கப்படவில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்த கர்நாடக தேர்தலில், காங்கிரஸ் குடும்பம் எல்லா வரம்புகளையும் உடைத்து, நாட்டின் உணர்வுகளை நசுக்கி ஒரு படி மேலே சென்றுள்ளது மோடி தெரிவித்தார்.

கர்நாடகத்தின் இறையாண்மை என காங்கிரஸ் அதன் அர்த்தம் தெரியாமல் கூறுவதாகவும் இத்தனை வருடங்களாக நாடாளுமன்றத்தில் அமர்ந்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது சத்தியப்பிரமாணம் செய்தும் இப்படிச் சொல்வது கேடு என்றும் கூறினார். ஒரு நாடு சுதந்திரம் அடைந்தால் தான் அந்த நாடு இறையாண்மை எனப்படும் என்றும் காங்கிரஸ் கூறும் அர்த்தத்தின் படி இந்தியாவில் இருந்து கர்நாடகாவை தனியாக பிரிக்க திட்டமிடுவதாகவும் கூறினார்.

இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய கன்னட போராளிகளை அவமதித்து, கோடிக்கணக்கான கன்னட மக்களின் தேசபக்தியை காங்கிரஸ் கட்சி அவமதித்ததாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். கர்நாடகாவின் உணர்வுகளை அவமதிப்பது, அந்த மாநிலத்தின் கலாச்சாரத்தையும் பெருமையையும் இழிவுபடுத்துவது போன்றது என பிரதமர் கூறினார்.

மேலும் காங்கிரஸ் கட்சி மாநிலங்களுக்கு இடையே பிளவை உருவாக்கி வகுப்புவாத தீயை பரப்புகிறது என்றும் அவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் போதெல்லாம் மக்கள் ஒன்றுபட்டு அவர்களை தோற்கடித்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். எப்படியாவது கர்நாடகாவில் ஆட்சிக்கு வர வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புவதாகவும் அந்த பாவத்தை கர்நாடக மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்றும் அதற்கான பதிலை மே 10 ஆம் தேதி காங்கிரஸ் முழு பலத்துடன் பெறும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

முன்னதாக பெங்களூரு முதல் மைசூரு வரை ஏறத்தாழ 25 கிலோ மீட்டருக்கும் அதிக தூரமாக பிரதமர் மோடி ரோடு ஷோ சென்றார். பிரசாரத்தின் இடையே பெங்களூரு நகரை நிறுவிய கெம்பெ கவுடாவுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பெங்களூருவில் உள்ள நியூ திப்பசந்தரா சாலையில் இருக்கும் கெம்பெ கவுடாவின் சிலையில் பிரதமர் மோடி மரியாதை செய்தார்.

இதையும் படிங்க : விளையாட்டு இயந்திரத்தில் சிக்கி சிறுமியின் கை விரல்கள் துண்டிப்பு - போலீஸ் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.