டெல்லி: அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்து உள்ள பொட்டவெளி வெள்ளூர் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இருந்த வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட உலோகத்தால் ஆன சாமி சிலைகள் திருடு போயின. இதுதொடர்பாக கடந்த 2012-ம் ஆண்டு செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கடந்த 2020-ம் ஆண்டு இந்த சிலை திருட்டு வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் செந்துறை வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து காணாமல் போன ஆஞ்சநேயர் சிலை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கிறிஸ்டி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டதும், அங்கிருந்து ஏலம் விடப்பட்டதும் தெரியவந்தது.
அந்த ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவை சேர்ந்த அமெரிக்க குடிமகன் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டதையும் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டு பிடித்தனர். வரதராஜ பெருமாள் கோயில் ஆஞ்சநேயர் சிலையின் புகைப்படத்தையும், கிறிஸ்டி அருங்காட்சியகத்தில் ஏலம் விடப்பட்ட ஆஞ்சநேயர் சிலையின் புகைப்படத்தையும் தொல்லியல் துறை நிபுணர்களின் உதவியோடு ஒப்பீடு செய்த போது 2 புகைப்படங்களில் இருந்ததும் ஒரே சிலை தான் என கண்டறியப்பட்டது.
இதையடுத்து காணாமல் போன வரதராஜ பெருமாள் கோயில் ஆஞ்சநேயர் சிலையை மீட்பது குறித்து தமிழக உள்துறை அமைச்சகத்திற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சார்பில் கடிதம் எழுதப்பட்டது. ஆஞ்சநேயர் சிலை ஏலம் எடுத்த ஆஸ்திரேலிய நாட்டவரை தொடர்பு கொண்ட அதிகாரிகள் சிலை குறித்த தகவல்களை தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலையை ஆஸ்திரேலியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மூலம் இந்திய தூதரகத்தில் அந்த நபர் ஒப்படைத்தார். தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தொல்லியல் துறை மூலம் ஆஞ்சநேயர் சிலை இந்தியா கொண்டு வரப்பட்டது. கடந்த 17-ஆம் தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் டெல்லி சென்று ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலையை பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து சென்னை கொண்டு வரப்பட்ட ஆஞ்சநேயர் சிலை, சிலை கடத்தல் வழக்குகளை விசாரணை செய்யும் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சிறப்பு கோர்ட்டில் போலீசார் ஒப்படைத்தனர். கும்பகோணத்தில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்தில் ஆஞ்சநேயர் சிலையை வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
-
We are constantly working towards ensuring our prized heritage comes back home. https://t.co/35nK2dCW8R
— Narendra Modi (@narendramodi) April 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">We are constantly working towards ensuring our prized heritage comes back home. https://t.co/35nK2dCW8R
— Narendra Modi (@narendramodi) April 25, 2023We are constantly working towards ensuring our prized heritage comes back home. https://t.co/35nK2dCW8R
— Narendra Modi (@narendramodi) April 25, 2023
இந்நிலையில் சிலை மீட்பு குறித்து மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில், "நாட்டின் பாரம்பரிய கலைப் பொருட்களை மீட்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், அதன் உதாரணமாக அரியலூர் மாவட்டம் பொட்டவெளி வெள்ளூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள், விஷ்ணு கோயிலில் இருந்து காணாமல் போன ஆஞ்சநேயர் உலோக சிலை மீட்கப்பட்டு உள்ளது" என பதிவிட்டுள்ளார். அதனை ரீட்விட் செய்துள்ள பிரதமர் மோடி, "நாட்டின் மதிப்புமிக்க பாரம்பரியம் வீடு திரும்புவதை உறுதி செய்வதில் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது: என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : Karnataka Election 2023 : நட்சத்திர வேட்பாளர்கள் மீதான வழக்கு பட்டியல் வெளியீடு!