மாஸ்கோ: ரஷ்யாவின் கிழக்கு காஸ்மோட்ரோவில் இன்று (செப்.13) ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன் சந்தித்துப் பேசினர். இரு நாட்டு தலைவர்களும் ஏவுகணைகள் அனுப்பும் தளத்தின் வெளியில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளன. அப்போது, ரஷ்ய அதிபர் கிம் ஜாங் உன்-னை பார்த்ததில் மகிழ்ச்சி என தெரிவித்ததாகவும் மேலும், அமெரிக்கா குறித்து இரு நாடுகளுக்கும் இருக்கும் தனித்தனி மோதல்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தரப்பு மொழி பெயர்ப்பாளர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது வேலைப்பளுகளுக்கு இடையே வரவேற்பு அளித்தற்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டு உள்ளார். மேலும், இரு நாட்டு தலைவர்களும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட உள்ளனர். ரஷ்யா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பின் படி, கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு வடகொரியா இரண்டு பளாஸ்டிக் வெடிகுண்டுகளை கடலில் சோதனை செய்துள்ளது எனவும், கடந்த 2022 முதல் கிம் ஜாங் உன் தொடர்ந்து வெடிகுண்டு சோதனைகள் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: இரண்டாம் உலக போருக்கு பின் ஸ்டாலினை சந்தித்த அமெரிக்க அதிபர்.. பேசு பொருளாகும் ஜோ பைடன் - ஸ்டாலின் கைகுலுக்கும் புகைப்படம்!
இந்த இரு நாட்டு சந்திப்புகள் வடகொரியாவை பொருத்தவரை நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளில் தளர்வு மற்றும் ஆயுத வளர்ச்சிக்கு ரஷ்யா உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றன.
இன்று செய்யப்பட்ட வெடிகுண்டு சோதனையில் வடகொரிய ஏவுகணைகள் எவ்வளவு துாரம் சென்றது என்பது குறித்து தென்கொரியா தற்போது வரை தகவல்கள் தெரிவிக்காத நிலையில், ஜப்பானின் கடலோர காவல்படை ஏவுகணைகள் கடலில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் சென்ற ரயில் நேற்று (செப்.12) ரஷ்யா - வடகொரியா எல்லையான காசானில் நிறுத்தப்பட்டு இருந்தன என்றும் பின், அங்கு வடகொரியா தலைவர் கிம் யை வரவேற்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, ரஷ்யா கவர்னர் ஒலெக் கோஜெமியாகோ மற்றும் அமைச்சர் அலெக்சாண்டர் கோஸ்லோவ் ஆகியோர் வரவேற்றதாகவும் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் புதின், கடந்த 2019ஆம் ஆண்டில், வடகொரிய தலைநகர் பியாங்யாங்கிற்கு விஜயம் செய்திருந்த நிலையில், கிம் தனது இலக்கை நோக்கி பயணிக்க உள்ளார் என்றும் ஆனால், அதில் எங்கு செல்வார் என குறிப்பிடப்படவில்லை என வடகொரியாவின் கொரியன் சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சி செய்தி வெளியிட்டு உள்ளது.
இதையும் படிங்க: INDIA blocs coordination committee: 2024 நாடாளுமன்ற தேர்தலில் யார் யாருக்கு எத்தனை இடங்கள் - INDIA கூட்டணி முக்கிய முடிவு!