ETV Bharat / bharat

அஸ்ஸாம் பேருந்து விபத்து; 12 பேர் உயிரிழப்பு - பிரதமர் நிவாரணம் அறிவிப்பு! - assam terrific accident

Assam Bus accident: அஸ்ஸாம் பேருந்து விபத்தில் உயிரிழந்த 12 பேரின் குடும்பங்களுக்கு பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2லட்சம் ரூபாயை நிவாரணத்தொகையாக அறிவித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாம் கோர விபத்து
அஸ்ஸாம் கோர விபத்து
author img

By ANI

Published : Jan 3, 2024, 10:30 PM IST

அஸ்ஸாம்: அஸ்ஸாம் மாநிலம் கோலாகாட் மாவட்டம் பலிஜன் நகரில் இருந்த குழு ஒன்று, சுற்றுலா செல்வதற்காக கர்பந்தாவில் இருந்து புறப்பட்டுள்ளது. அதிகாலையில் சுற்றுலாப் பேருந்து திலிங்க மந்திர் பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே சென்ற லாரியுடன் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

முன்னதாக விபத்து குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு, பேருந்தில் இருந்த அனைவரையும் மீட்டு, அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் காவல்துறை மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை மற்றும் மீட்புப் படையினர், பேருந்து இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு, அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவரது X பக்கத்தில் பதிவிட்டதாவது, "கோல்காட் பகுதியில் ஏற்பட்ட சுற்றுலாப் பயணிகளின் விபத்து செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. விபத்தில் சிக்கிய அனைவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் அவர்கள் அனைவரும் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டிருந்தார்.

  • असम के गोलाघाट में हुई सड़क दुर्घटना में अनेक लोगों की आकस्मिक मृत्यु का समाचार अत्यंत दुखद है। मैं शोक-संतप्त परिवारों के प्रति गहन संवेदना व्यक्त करती हूं और घायल हुए लोगों के शीघ्र स्वस्थ होने की कामना करती हूँ।

    — President of India (@rashtrapatibhvn) January 3, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த கோர சம்பவம் குறித்து பிரதமர் மோடி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்து ஆறுதல் தெரிவித்து, அவரது X பக்கத்தில் வெளியிட்டதாவது, "அஸ்ஸாம் பேருந்து விபத்து செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • Pained by the loss of lives due to a road mishap in Golaghat, Assam. Condolences to the bereaved families. May the injured recover at the earliest. The local administration is providing all possible assistance to those affected. An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be…

    — PMO India (@PMOIndia) January 3, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியிலிருந்து, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள், குணமடைந்து விரைவில் வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா பதிவிட்டிருந்தது, "இன்று அதிகாலை 5 மணியளவில் சுற்றுலாப் பயணிகள் சென்ற பேருந்தும், எதிரே வந்த லாரியும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளான செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிந்துள்ளனர். மேலும் 25க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விபத்தில் சிக்கிய அனைவரையும் காவல்துறை மற்றும் அப்பகுதி மக்கள் விரைந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் தொடர்ந்து காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் மாநில அரசு ஏற்பாடு செய்து வருகிறது" என்று விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்து அவரது X பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இது குறித்து கோல்காட் மாவட்டத்தின் எஸ்பி ராஜன் சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது, "இன்று அதிகாலை 5 மணியளவில் சுற்றுலாப் பயணிகளின் குழுவைக் கொண்ட பேருந்து, எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த 27 பேர் ஜோர்கட் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவம் அறிந்து அப்பகுதி மக்கள் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த கோர விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஈரானில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு; 73 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.