ETV Bharat / bharat

இந்திய அரசியலமைப்பு தினம்; உச்ச நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்த குடியரசுத் தலைவர்!

அரசியலமைப்பு தினத்தன்று உச்ச நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைத்தார்.

President Droupadi Murmu unveils Ambedkar statue in the Supreme Court campus on Constitution Day
உச்ச நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலையைத் திறந்து வைத்த குடியரசுத்தலைவர்
author img

By PTI

Published : Nov 26, 2023, 2:13 PM IST

டெல்லி: நாடு சுதந்திரம் பெற்ற பின் தனியாக அரசியலமைப்பு தேவை என்பதால், சட்டமேதை அம்பேத்கரின் தலைமையில் அரசியலமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அரசியலமைப்பு உருவாக்குவதில் அவரது பங்கு அதிகமாக இருந்ததால், அவர் அரசியலமைப்பின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

1949ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர் 2015ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 26ஆம் தேதி அரசியலமைப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்திய அரசியலமைப்பு தினம் இன்று (நவ.26) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இந்திய அரசியலமைப்பு தந்தையான அம்பேத்கரின் முழு உருவச் சிலை, உச்ச நீதிமன்ற வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்த நிகழ்வில் பங்கேற்று அம்பேத்கரின் சிலையைத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் லால் மேக்வால் ஆகியோர் அம்பேத்கரின் 7 அடி உயர சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நீதிபதி சந்திரசூட் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்த நிகழ்வில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • On this momentous #ConstitutionDay, as we witness the unveiling of Dr. B.R. Ambedkar's statue at the #SupremeCourt, let us honour the enduring wisdom of our Constitution. Let us extend our heartfelt salutations to the custodians of justice who tirelessly uphold its noble ethos in… pic.twitter.com/oKMFdN0xKf

    — M.K.Stalin (@mkstalin) November 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

உச்ச நீதிமன்றத்தில் அம்பேத்கரின் சிலை நிறுவப்பட்டிருப்பதற்கு தனது வரவேற்பைத் தெரிவிக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அவரது X சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “உச்ச நீதிமன்ற வளாகத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சிலை திறக்கப்படும் இந்தச் சிறப்புமிகு அரசமைப்புச் சட்ட நாளில், நமது அரசமைப்புச் சட்டத்தின் நிலைத்த மதிநுட்பத்தைப் போற்றுவோம்.

அரசமைப்புச் சட்டத்தின் உயர் பண்புகளை நீதித்துறையில் காப்பதற்காக அயராது பாடுபடும் நீதியின் பாதுகாவலர்களுக்கு நமது நெஞ்சார்ந்த வணக்கத்தைச் செலுத்துவோம். அம்பேத்கருக்கு சிலை வடிவிலான புகழ் வணக்கம் என்பது வெறும் நினைவுகூர்தல் அல்ல, அது அவர் வகுத்தளித்த நீதி, சமத்துவம் மற்றும் மக்களாட்சி மாண்புகளின் மீது நாம் கொண்டுள்ள பற்றுறுதியின் அடையாளச் சின்னம் ஆகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல்; 74.13 சதவீத வாக்குகள் பதிவானது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.