ETV Bharat / bharat

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஆந்திரா வருகை; மாலை கடற்படை தின நிகழ்ச்சியில் பங்கேற்பு! - திருப்பதியில் சாமி தரிசனம்

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக ஆந்திரா சென்றுள்ளார். இன்று மாலை இந்திய கடற்படை தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறார்.

President
President
author img

By

Published : Dec 4, 2022, 2:22 PM IST

அமராவதி: குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக ஆந்திரா சென்றுள்ளார். இன்று(டிச.4) காலை விஜயவாடா விமான நிலையம் சென்றடைந்த முர்முவை, அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இரண்டு நாட்கள் பயணமாக ஆந்திரா சென்றுள்ள முர்மு, இன்று திருமலையில் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். மாலையில், விசாகப்பட்டிணத்தில் நடைபெறவுள்ள இந்திய கடற்படை தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறார். பின்னர், பாதுகாப்புத்துறை, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை, பழங்குடியினர் நலத்துறையின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு காணொலி வாயிலாக அடிக்கல் நாட்ட உள்ளார்.

நாளை காலை திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்கிறார். பிறகு திருப்பதியில் உள்ள ஸ்ரீபத்மாவதி மகிளா விஸ்வ வித்யாலயத்திற்குச் செல்லும் அவர், அங்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துரையாட இருக்கிறார். குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி திருப்பதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கைதிகளை அடிக்காமல் விசாரணை.. அமெரிக்கா பாணியில் கொல்கத்தா போலீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.