ETV Bharat / bharat

இந்திய - அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு வெள்ளை மாளிகை தேசிய விருது! - america

இந்திய அமெரிக்க விஞ்ஞானிகளான அசோக் காட்கில் மற்றும் சுப்ரா சுரேஷ் ஆகியோருக்கு தொழில்நுட்பம் மற்றும் புதுமைக்கான வெள்ளை மாளிகை தேசிய விருது வழங்கப்பட்டது.

Etv Bharat
Etv Bharat
author img

By PTI

Published : Oct 25, 2023, 2:12 PM IST

வாஷிங்டன் (அமெரிக்கா): இந்திய அமெரிக்க விஞ்ஞானிகளான அசோக் காட்கில் மற்றும் சுப்ரா சுரேஷ் ஆகியோருக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன், அமெரிக்க நாட்டின் உயரிய விருதினை வழங்கி கௌரவித்தார். நேற்று (அக் - 24) தொழில்நுட்பம் மற்றும் புதுமைக்கான வெள்ளை மாளிகை தேசிய பதக்கத்தை, (White House National Medal for Technology and Innovation) அசோக் காட்கிலுக்கு அமெரிக்க அதிபர் வழங்கினார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் சிறந்து விளங்கிய இரு விஞ்ஞானிகளுக்கு நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அமெரிக்காவின் முன்னணி கண்டுபிடிப்பாளர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

அசோக் காட்கில் யார்?: தொழில்நுட்பம் மற்றும் புதுமைக்கான வெள்ளை மாளிகை தேசிய பதக்கத்தை பெற்ற 12 பேரில் இவரும் ஒருவர். மும்பை பல்கலைகழகம் மற்றும் ஐஐடி கான்பூரில் இருந்து இயற்பியல் பட்டங்களை பெற்றார். கலிபோர்னியா பல்கலைக்கழகம் பெர்க்லியில் தனது பிஹெச்.டி படிப்பைபையும் முடித்தார். 1980 இல் லாரன்ஸ் பெர்க்லி தேசிய ஆய்வகத்தில் சேர்ந்தார். இடைவிடாத ஆய்வுக்குப்பின் இந்த ஆண்டில் தொடக்கத்தில் ஓய்வு பெற்றார்.

அசோக் காட்கில், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள சிவில் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் துறையின் புகழ்பெற்ற பேராசிரியர். விஞ்ஞானி அசோக் காட்கில், உலகெங்கும் உள்ள மக்கள் வாழ்வதற்கு தேவையான ஆதாரங்களை வழங்கியதால் அவருக்கு தொழில்நுட்பம் மற்றும் புதுமைக்கான வெள்ளை மாளிகை தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. குறைந்த செலவீனத்தில் உலகில் தீர்க்கமுடியாத சில பிரச்சினைகளுக்கும் தீர்வை கண்டுபிடித்துள்ளார்.

குறிப்பாக, பாதுகாப்பான குடிநீர் தொழில்நுட்பத்தை உருவாக்குதல், அதிக சக்தி வாய்ந்த அல்லது திறன் வாய்ந்த அடுப்புகளை உருவாக்குதல், அதிக திறன் வாய்ந்த மின்விளக்குகளை உருவாக்குதல் போன்றவற்றை செய்துள்ளார். இவரது திட்டங்கள் அனைத்தும் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உதவியுள்ளன.

சுப்ரா சுரேஷ் யார்?: சுப்ரா சுரேஷ், அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் துறையின் பேராசிரியர். பொறியியல் ஆய்வு, இயற்பியல் ஆய்வு, வாழ்க்கை அறிவியல் மற்றும் மெட்டிரியல் அறிவியல் குறித்த ஆய்வு போன்றவற்றால் அவருக்கு தொழில்நுட்பம் மற்றும் புதுமைக்கான வெள்ளை மாளிகை தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. 1956இல் பிறந்த சுப்ரா சுரேஷ், தனது தனது 25 வயதில் பிஹெச்.டி பட்டம் பெற்றார்.

மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார். 1983இல் பிரவுன் பல்கலைக்கழகத்தில் ஆசிரிய உறுப்பினரானார். பிரவுன் பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பின் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் (National Science Foundation - NSF) தலைவரானார். அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இவருக்கு பணிநியமனம் செய்து வைத்தார். 50க்கும் மேற்பட்ட நாடுகளின் நிதியால் குளோபல் ரிசர்ச் கவுன்சிலை (Global Research Council) நிறுவினார். இது உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் டேட்டா பகிர்வை நோக்கமாக கொண்டு இந்த கவுன்சில் செயல்பட்டது. முனைவர் பட்டம் பெறும் பெண்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் சென்டர் லைப் பேலன்ஸ் திட்டத்தை நிறுவுவதையும் மேற்பார்வையிட்டார்.

அசோக் காட்கில் மற்றும் சுப்ரா சுரேஷ் ஆகிய இருவருக்கும் அமெரிக்க நாட்டின் உயரிய விருதான தொழில்நுட்பம் மற்றும் புதுமைக்கான வெள்ளை மாளிகை தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை அமெரிக்க அதிபர் ஜோபைடன் வழங்கினார்.

இதையும் படிங்க: பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! கண்டம் விட்டு பாயும் ஏவுகணை சோதனை எனத் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.