மேற்கு வங்கம் மாநிலம் தமோஹனி என்ற பகுதியில் நேற்று(ஜன.13) மாலை ஐந்து மணி அளவில் பயணிகள் விரைவு ரயில் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
அசாம் மாநிலம் கௌஹாத்தியிலிருந்து ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்ற கௌஹாத்தி விரைவு ரயில் தடம்புரண்டு ஏற்பட்ட விபத்தில் சிக்கி இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். 36 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்த விபத்து குறித்து ஆய்வு செய்ய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் இன்று மேற்கு வங்கம் விரைந்தார். சம்பவயிடத்தில் ஆய்வு செய்த அமைச்சர் வைஷ்னவ், முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில், ரயிலின் லோக்கோமோட்டிவ் இயந்திர கோளாறே விபத்து ஏற்பட காரணமாக இருக்க கூடும்.
இது குறித்து உரிய ஆய்வு துரிதமாக மேற்கொள்ளப்பட்டு உண்மை கண்டறியப்படும். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரூ.1,000 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட ராமானுஜர் சிலை பிப்.5 திறப்பு