பீகார்: வைஷாலி என்ற பகுதியில் ரஞ்சு என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு கடந்த செவ்வாய்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து உறவினர்கள் அவரை அருகில் இருந்த பெண் மகப்பேறு மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கக் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அப்போது சிகிச்சை அளிக்க அப்பெண்ணிடம் போதிய பணம் இல்லாததால் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்தாக தெரிகிறது. இரவு அப்பெண்ணின் அவசர சிகிச்சைக்காக உறவினர்கள் வேறு மருத்துவரை தேடி அலைந்தனர். பின்னர் தனியார் கிளினிக் ஒன்றில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் அவரது உடல்நிலை மோசமானதால் ரஞ்சு உயிரிழந்தார்.
இறந்த கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள் பேசுகையில், "நாங்கள் ரஞ்சுவை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவருக்கு ஆக்சிஜன் மாஸ்க் செலுத்துவதற்கு ரூ.500 கொடுத்தோம். பின்னர் மற்றொரு மருத்துவமனையை பரிந்துரைத்தனர். அங்கு செல்வதற்கு எங்களிடம் ஆம்புலன்ஸ் கட்டணமாக ரூ.1500 கேட்டனர். ஆனால் எங்களிடம் பணம் இல்லாததால் எங்களால் செல்ல முடியவில்லை” என வேதனையுடன் கூறினர்.
இதனிடையே, உயிரிழந்த பெண்ணின் இறுதிச்சடங்குக்காக உள்ளூர் கிராம தலைவர்கள் ரூ.3000 வழங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: கோயிலுக்கு சென்றபோது நிகழ்ந்த விபத்தில் 6 பேர் பலி!