கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள இந்தியானா மருத்துவமனையில் பணிபுரிந்த கேரளாவைச் சேர்ந்த கர்ப்பிணி மருத்துவருக்கு அண்மையில் கரோனா தொற்று ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவர் பணிபுரிந்த மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் திடீரென ஏற்பட்ட சுவாசக் கோளாறு காரணமாக நேற்று (ஏப்ரல் 27) காலை அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த மருத்துவர் எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவரது கணவரும் இந்தியானா மருத்துவமனையில் பணிபுரிந்துவருகிறார்.
தற்போது, உயிரிழந்த மருத்துவரின் உடல் அவரது சொந்த ஊரான கேரள மாநிலம் தலைச்சேரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.