ETV Bharat / bharat

குஜராத்தில் ஹீராபென் மோடிக்கு இன்று துக்கம் அனுசரிப்பு - பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கு இன்று துக்கம் அனுசரிப்பு கூட்டம் நடக்கிறது.

ஹீராபென் மோடியின் துக்க அனுசரிப்பு
ஹீராபென் மோடியின் துக்க அனுசரிப்பு
author img

By

Published : Jan 1, 2023, 11:49 AM IST

குஜராத்: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (100) உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 30ஆம் தேதி அன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவையொட்டி, பிரதமர் மோடி குஜராத் வந்தடைந்தார்.

அங்கு அவரது சகோதரரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஹீராபென் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அதையடுத்து குஜராத் மாநிலம் காந்திநகரில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இவரது மறைவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் உள்ளது. என் அம்மாவிடம், ஒரு துறவியின் வாழ்க்கை பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளத்தையும், மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும் உணர்ந்துள்ளேன்.

அவருடைய 100ஆவது பிறந்தநாளில் அவரைச் சந்தித்தபோது, என்னிடம் ஒரு விஷயத்தை சொன்னார். அது எப்போதும் நினைவில் இருக்கும். "புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழுங்கள்" என்றார். அதுபோலவே, புத்திசாலித்தனத்துடன் வேலை செய்கிறோம், தூய்மையுடன் வாழ்கிறோம்" என உருக்கமாக பதிவிட்டிருந்தர். இதனிடையே பல்வேறு அரசியல் பிரமுகர்கள், ஹீராபென் மோடியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இன்று (ஜனவரி 1) ஹீராபென் மோடியின் துக்க அனுசரிப்பு கூட்டம், காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை குஜராத் மாநிலம் வாட்நகரில் நடைபெறுகிறது. முக்கிய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் கலந்துகொள்கின்றனர்.

இதையும் படிங்க: விமான பயணிகளுக்கு கரோனா சான்றிதழ் கட்டாயம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.