ETV Bharat / bharat

ராகுல் - பி.கே. சந்திப்பு... தேர்தலுக்கு தயாராகிறதா காங்கிரஸ்?

தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தியை இன்று (ஜூலை 13) சந்தித்துள்ளார்.

author img

By

Published : Jul 13, 2021, 10:11 PM IST

Updated : Jul 14, 2021, 9:29 AM IST

ராகுல் காந்தி பிரசாந்த் கிஷோர் திடீர் சந்திப்பு

டெல்லி: தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு சில மாதங்களுக்கு முன் தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில், தமிழ்நாட்டில் திமுகவுக்கும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் பணியாற்றினார்.

இந்த இரண்டு மாநிலங்களிலும் பாஜக அணிக்கு எதிராக பெரும் வெற்றியை அந்த இரண்டு கட்சிகளும் பெற்றன. அதன்பின் அவர் ஐ-பேக் நிறுவனத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்

பிகே எஃபக்ட்

உத்தரப் பிரதேசம், குஜராத், உத்தரகாண்ட், இமாச்சல பிரேதசம், கோவா, மணிப்பூர் என பாஜக ஆளும் மாநிலங்களிலும், காங்கிரஸ் ஆட்சி செய்யும் பஞ்சாபிலும் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தல்களில் பாஜகவுக்கு எதிரான அணியை வலுப்படுத்தும் நோக்கில் பிராசந்த் கிஷார் செயல்படுவதாக கூறப்படுகிறது.

இதை உறுதிசெய்யும் வகையில், சமீபத்தில் அவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் என பல முக்கிய தலைவர்களை சந்தித்து பேசியதும், அந்த சந்திப்பிற்கு பிறகு சரத் பவார் தலைமையில் பாஜக கூட்டணி அல்லாத கட்சியினருக்கான டெல்லியில் நடைபெற்ற கூட்டமும் தேசிய அரசியலில் பல விவாதங்களை ஏற்படுத்தியது.

ராகுல் - பிகே சந்திப்பு

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தியை இன்று அவரின் இல்லத்தில் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் உடனிருந்தனர்.

சமீப காலமாக பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்குக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் அரசின் முன்னாள் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டுவருகிறது. இருவரையும் சமாதானப்படுத்தவும், பஞ்சாப் தேர்தல் குறித்தும் ராகுல் - பிரசாந்த் சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் உத்தி வகுப்பாளராக செயல்பட்டார். எனினும், அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது

இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் கூட்டம் நிறைவு- பரபரப்பு தகவல்கள்!

Last Updated : Jul 14, 2021, 9:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.