ETV Bharat / bharat

டெல்லி செங்கோட்டையில் 'ராம் லீலா'; ராவணன் பொம்மையை எரிக்கவிருக்கும் பிரபாஸ்

author img

By

Published : Oct 5, 2022, 12:10 PM IST

டெல்லி செங்கோட்டையில் நடக்கவிருக்கும் ‘லவ குச ராம் லீலா’ நிகழ்வில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்.

டெல்லி செங்கோட்டையில் ’ராம் லீலா’; ராவணன் பொம்மையை எரிக்கவிருக்கும் பிரபாஸ்

டெல்லி: வரலாற்றுச்சிறப்புபெற்ற ‘லவ குச ராம் லீலா’ நிகழ்வு டெல்லி செங்கோட்டையில் ஆண்டுதோறும் நடைபெறும். இந்நிலையில், தெலுங்கு நடிகர் பிரபாஸ் இம்முறை தசரா பண்டிகையன்று ராவணன், கும்பகர்ணன், மேகநாத் போன்ற உருவ பொம்மைகளை எரிக்கவுள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் முதல் டெல்லி மக்களிடையே இந்நாள் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஆயிரக்கணக்கான போன் அழைப்புகள் வந்து குவிவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதுவரை மட்டும் ‘ லவ குச ராம் லீலா’ நிகழ்விற்கு 5 லட்சம் பாஸ்கள் விற்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு நாட்டின் ஜனாதிபதி திரௌபதி முர்மு, இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவுள்ளார். அவருடன் சேர்த்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் 15 வெவ்வேறு நாடுகளிலிருந்து தூதகர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

கரோனா பரவலால் இரண்டு ஆண்டு இடைவெளிக்குப்பிறகு இவ்விழா தற்போது நடக்கவுள்ளது. இந்த ராம் லீலா நிகழ்வைப் பல்வேறு ராம்லீலா கமிட்டிகள் டெல்லியிலுள்ள 600க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்துவர். இதற்கு பெரும் திரளாய் மக்கள் கூட்டம் வருவார்கள்.

இம்முறை செங்கோட்டையில் நடைபெறவுள்ள லவ குச ராம் லீலாவில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் கலந்துகொள்ளவுள்ளார். ஆகையால், இதுவரை 5 லட்சம் பாஸ்கள் விற்கப்பட்டுள்ளன. மேலும் இரண்டு லட்சம் பாஸ்கள் அச்சடிக்க கொடுக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்விற்குத்தேவையான பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இம்முறை வழக்கமாக வைக்கப்படும் மூன்று உருவ பொம்மைகள் இல்லாமல், 9 உருவ பொம்மைகள் வைக்கப்பட உள்ளதாக ராம் லீலா கமிட்டி தெரிவித்துள்ளது.

ஏனென்றால், ஜனாதிபதி, முதலமைச்சர், பிரபாஸ் என மூவரும் எரிக்கலாம் என்பதற்காக இம்முறை மட்டும் ஒன்பது பொம்மைகள் வைக்கப்படவுள்ளன. இந்த உருவ பொம்மைகளின் உயரம் 100 அடிவரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காஷ்மீரில் நான்கு பயங்கரவாதிகள் இரண்டு என்கவுன்ட்டர்களில் சுட்டுக்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.