'பாகுபலி' பிரபாஸ் நடித்துள்ள அதிரடி சாகசப்படமான "சலார்" செப்டம்பர் 28, 2023அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என அப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பு இன்று (ஆகஸ்ட் 15)அறிவித்துள்ளது. "கேஜிஎஃப்" படப்புகழ் பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தை விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார்.
தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் சுதந்திர தினத்தை முன்னிட்டு, படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் பிரபாஸின் புதிய போஸ்டரை வெளியிட்டது. இப்படம் இந்தியா முழுவதிலும் வெளியாக உள்ளது. சலார் படத்திற்கான காட்சிகள் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்டது. மேலும் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இது பான் இந்தியா திரைப்படமாக மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.
இதில் ஸ்ருதி ஹாசன், பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோருடன் ஜெகபதி பாபு, ஈஸ்வரி ராவ் மற்றும் ஸ்ரேயா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதனையடுத்து பிரபாஸ், நாக் அஸ்வினின் சயின்ஸ்-பிக்சன் படமான "புராஜெக்ட் கே" படத்தில் தீபிகா படுகோனேவுடன் இணைந்து நடித்துவருகிறார். மேலும் ஓம் ராவுத்தின் ராமாயண காவியமான "ஆதிபுருஷ்" படத்தின் பணிகளும் நடந்து வருகின்றன.
-
'𝐑𝐄𝐁𝐄𝐋'𝐋𝐈𝐍𝐆 𝐖𝐎𝐑𝐋𝐃𝐖𝐈𝐃𝐄 𝐎𝐍 𝐒𝐄𝐏 𝟐𝟖, 𝟐𝟎𝟐𝟑.#Salaar #TheEraOfSalaarBegins#Prabhas @prashanth_neel @VKiragandur @hombalefilms @shrutihaasan @PrithviOfficial @IamJagguBhai @sriyareddy @bhuvangowda84 @RaviBasrur @shivakumarart @anbariv @SalaarTheSaga pic.twitter.com/8vriMflG84
— Salaar (@SalaarTheSaga) August 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">'𝐑𝐄𝐁𝐄𝐋'𝐋𝐈𝐍𝐆 𝐖𝐎𝐑𝐋𝐃𝐖𝐈𝐃𝐄 𝐎𝐍 𝐒𝐄𝐏 𝟐𝟖, 𝟐𝟎𝟐𝟑.#Salaar #TheEraOfSalaarBegins#Prabhas @prashanth_neel @VKiragandur @hombalefilms @shrutihaasan @PrithviOfficial @IamJagguBhai @sriyareddy @bhuvangowda84 @RaviBasrur @shivakumarart @anbariv @SalaarTheSaga pic.twitter.com/8vriMflG84
— Salaar (@SalaarTheSaga) August 15, 2022'𝐑𝐄𝐁𝐄𝐋'𝐋𝐈𝐍𝐆 𝐖𝐎𝐑𝐋𝐃𝐖𝐈𝐃𝐄 𝐎𝐍 𝐒𝐄𝐏 𝟐𝟖, 𝟐𝟎𝟐𝟑.#Salaar #TheEraOfSalaarBegins#Prabhas @prashanth_neel @VKiragandur @hombalefilms @shrutihaasan @PrithviOfficial @IamJagguBhai @sriyareddy @bhuvangowda84 @RaviBasrur @shivakumarart @anbariv @SalaarTheSaga pic.twitter.com/8vriMflG84
— Salaar (@SalaarTheSaga) August 15, 2022
இயக்குநர் பிரசாந்த் நீலின் முந்தைய படமான கேஜிஎஃப் -2இல் ’சலார்’ என்ற ஒரு கதாபாத்திரம் இடம்பெற்றிருப்பதாகவும், அந்த கதாபாத்திரத்தின் தொடர் கதையாக இந்தப் படம் இருக்கலாம் எனவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:வாரிசு திரைப்பட காட்சி இணையத்தில் கசிந்தது