ETV Bharat / bharat

மொராக்கோ நிலநடுக்கம்.. உயிரிழப்பு கிடுகிடு உயர்வு... 600ஐ கடந்த பலி எண்ணிகை! அதிகரிக்கும் அச்சம்!

Morocco Earthquake: மொராக்கோவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 632 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் 329 பேர் காயமடைந்துள்ளதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்து உள்ளனர். மேலும் வரலாற்று கட்டிடங்கள் பல சேதம் அடைந்துள்ளதாக மொராக்கோ உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Powerful quake in Morocco kills more than 600 people and damages historic buildings in Marrakech
மொராக்கோ நிலநடுக்கம் இதுவரை 632 பேர் உயிரிழப்பு; மேலும் உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
author img

By PTI

Published : Sep 9, 2023, 4:51 PM IST

மொராக்கோ (ரபாத்): மொராக்கோவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 632 பேர் உயிரிழந்ததாகவும், 329 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. மேலும் வரலாற்று கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் மொராக்கோ உள்துறை அமைச்சகம் கூறி உள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் அட்லஸ் மலை பகுதியிலுள்ள கிராமங்களிலிருந்து வரலாற்று நகரமான மராகேக் வரையிலான கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. மொராக்கோ உள்துறை அமைச்சகம் இன்று காலை (செப்.9) வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி 632 பேர் உயிரிழந்து இருக்கலாம் எனவும் 329 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கம் மராகேச் பகுதியை சுற்றி உள்ள 5 மாகாணங்களில் ஏற்பட்டு இருக்கலாம் எனவும் இதனால் மீட்புப் படையினர் தொலைதூர சென்றடைவதற்குள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

  • Das sind schlimme Nachrichten aus #Marokko. In diesen schweren Stunden sind unsere Gedanken bei den Opfern des verheerenden Erdbebens. Unser Mitgefühl gilt allen Betroffenen dieser Naturkatastrophe.

    — Bundeskanzler Olaf Scholz (@Bundeskanzler) September 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மொராக்கோ நிலநடுக்கத்தினால் மராகேச் நகர் முழுவதும் கட்டிடங்கள் இடிந்து பல குடும்பங்கள் ஆதரவு இல்லாமல் உள்ளனர். மேலும் ஒரு புரம் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டுக்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுப்பட்டுள்ளனர். நகரின் மிகவும் பிரபலமான அடையாளங்களில் ஒன்றான மராகேச்சில் உள்ள 12ஆம் நூற்றாண்டின் கௌடோபியா மசூதி சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான மராகேச்சில் உள்ள புகழ் பெற்ற சிவப்பு சுவர்களின் பகுதிகளும் சேதம் எற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தின் காரணமாக மராகேச் பகுதியில் உள்ள பல இடங்களில் மின்சாரம் மற்றும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஆம்புலன்ஸ்கள் செல்வதற்காக அல ஹவுஸ் மாகாணத்தில் உள்ள சாலைகளில் இடிந்து கிடக்கும் கட்டிடங்களை அகற்றும் பணியானது விரைந்து நடைபெறுவதாக தகவல் கிடைக்க பெற்றுள்ளன. மேலும் மலை கிராமங்களுக்கு இடையே அதிக தூரம் இருப்பதால் அங்கு மீட்பு படையினர் செல்ல தாமதம் ஏற்பட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: Morocco earthquake : மொராக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... 300 பேர் பலி!

மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பாக உலகம் முழுவதும் இருந்து பல நாட்டு தலைவர்கள் தங்களது வருத்ததை தெரிவித்துள்ளனர். மேலும் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் மொராக்கோவிற்கு தனது இரங்கலை X தளத்தில் தெரிவித்துள்ளார். இதே போல் பிரதமர் நரேந்திர மோடி X தளத்தில் "இந்த கடினமான நேரத்தில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளதாக" தெரிவித்திருந்தார்.

மொராக்கோ அரசாங்கத்திற்கு உதவ ஐக்கிய நாடுகள் சபை தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மொராக்கோவில் முதற்கட்ட நிலநடுக்கம் நேற்று (செப். 8) இரவு 11:11 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.8 ரிக்டர் அளவில் பதிவாகி இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மேலும் 19 நிமிடங்களுக்கு பின் மீண்டும் 4.9 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொராக்கோவில் நடைபெற்ற நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பிலிருந்து 18 கிலோமீட்டர் கீழே ஏற்பட்டுள்ளது. என USGS கூறியுள்ளது. இது போன்ற ஆழமற்ற நிலநடுக்கங்கள் மிகவும் ஆபத்தானைவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1960ஆம் ஆண்டு மொராக்கோ நகரமான அகாடிருக்கு அருகில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2004ஆம் ஆண்டில், மத்தியதரைக் கடலோர நகரமான அல் ஹோசிமா அருகே 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு 600க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் தற்போது மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கம் போர்ச்சுகல் மற்றும் அல்ஜீரியா வரை உணரப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Morocco Earthquake : மொராக்கோ நிலநடுக்கம் - பிரதமர் மோடி இரங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.