குற்றம் சாட்டப்பட்டவரை வெளியே விடுவது விசாரணைக்கு தடையாய் இருக்கும் எனவும் அவர்கள் செய்த குற்றம் சமூகத்துக்கு தீங்காக இருப்பதாகவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்தான உத்தரவில், "இந்தக் குற்றத்தின் விளைவு, மக்களுடன் பெரும் தொடர்பை கொண்டுள்ளது. இந்தக் குற்றம் நமது சமூக ஆரோக்கியத்துக்கும் தீங்காக இருக்கிறது.
தற்போது இவ்வழக்கு தொடர்பான விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. இதுபோன்ற சூழலில், குற்றஞ்சாட்டப்பட்டவரின் விடுதலை நிச்சயமாக விசாரணைக்கு இடையூறாக இருக்கும். சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, இரண்டு பிணை மனுக்களும் நிராகரிக்கப்படுகின்றன” என குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஆதாரங்களை அழித்துவிட்டனர் என அரசு தரப்பு வாதத்தையும் நீதிமன்றம் கருத்தில் கொண்டது.
இதையும் படிங்க: ஊடக சர்ச்சைக்கு நாங்கள் தகுதியானவர்கள் இல்லை - நடிகை ஷில்பா ஷெட்டி