புதுச்சேரி: மாநிலம் முழுவதுமாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
கரோனாவிருந்து விடுபடுவதற்கு புதுச்சேரி மாநிலத்தை 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக சுகாதாரத் துறையின் மூலமாக இன்று (ஜூன் 16) முதல் 19ஆம் தேதி வரை தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்கள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன.
முன்களப் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி: ஜூன் 18ஆம் தேதி பிரதமர் தொடங்கிவைப்பு!
இதன், தொடக்க நாளான இன்று துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், காந்தி வீதியில் உள்ள தனியார் பள்ளிகள் நடைபெற்ற முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறும்போது, "புதுச்சேரியில் மீண்டும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி புதுச்சேரி மாநிலம் முழுவதுமாக தடுப்பூசி போடப்பட்ட மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே அரசின் நோக்கம்" என்றார்.