புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் கம்பன் நகரிலுள்ள உழவர்கரை தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் அங்காளனை ஆதரித்து, முன்னாள் காங்கிரஸ் முதலமைச்சர் நாராயணசாமி திறந்தவெளி ஜீப்பில் சென்று பரப்புரை மேற்கொண்டார்.
தொடர்ந்து வில்லியனூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து சுல்தான்பேட்டையில் அவர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”ஆட்சிக் கலைப்பில் ஈடுபடும் பச்சோந்திகளை அடித்து விரட்டி, எங்களுக்கு ஆதரவு தாருங்கள்” என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.