ETV Bharat / bharat

காலியாக உள்ள பதவிகள் எப்போது நிரப்பப்படும்? - புதுச்சேரி பல்கலை. பதிலளிக்க உத்தரவு - காலிப்பணியிடங்கள் பிரச்சினை

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பதவிகள் எப்போது நிரப்பப்படும் எனப் பல்கலைக்கழகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
author img

By

Published : Oct 2, 2021, 6:13 PM IST

சென்னை: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 2015ஆம் ஆண்டுமுதல் பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பதவிகள் காலியாக உள்ளன. தற்போது தற்காலிகமாக நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதால் இந்தப் பதவிகளை நிரப்ப உத்தரவிட வேண்டும் எனப் புதுச்சேரி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், பொறுப்புப் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளவரை பதிவாளராக நியமிக்கும் வகையில் நியமனங்கள் நிரப்பப்படாமல் தாமதப்படுத்துவதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பதவிகளை நிரப்புவதற்காக விண்ணப்பங்களை வரவேற்று 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், பதவிகளை நிரப்ப நடவடிக்கை எடுத்துவருவதாகவும் புதுச்சேரி பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், காலியாக உள்ள பதவிகள் எப்போது நிரப்பப்படும் என்பது குறித்து பல்கலைக்கழகம் அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: அவரவர் சொந்த வழியைத் தொடரப் போகிறோம் - சமந்தா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.