ETV Bharat / bharat

ஊடகத்துறையில் ஆர்வம் உள்ளவங்க இதை பயன்படுத்திக்கோங்க..!

author img

By

Published : Aug 3, 2021, 5:43 AM IST

புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தில் புகைப்பட இதழ்கள் தொடர்பான 'சுயம்' இலவச இணைய புதியப் பாட வகுப்புகளை துணைவேந்தர் குர்மீத் சிங் தொடங்கி வைத்தார்.

pondicherry-university-provide-2-free-online-courses-for-media
ஊடகத்துறையில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்- உங்களுக்கான வாய்ப்புதான் இது...

புதுச்சேரி: இது தொடர்பாக புதுவைப் பல்கலைக்கழக கல்வி பல்லுாடக ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், " புதுவைப் பல்கலைக்கழக கல்வி பல்லுாடக ஆராய்ச்சி மையம் சார்பில் இந்த கல்வியாண்டு முதல் இணைய வழியிலான இலவச இரண்டு புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

இலவச பாடப்பிரிவில் சேர தகுதிகள்

ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்பட உள்ள இலவச வகுப்புகளான புகைப்பட இதழியல், ஊடகச் சட்டம் ஆகிய இரண்டு புதியப் பாடப்பிரிவுகளில் புகைப்படத் துறை, இதழியல் துறைகளில் ஆர்வம் உள்ளவர்கள் சேர்ந்து பயன் பெறலாம். வயது வரம்பு எதுவுமில்லை.

மாணவர்களின் வேலை வாய்ப்பு, தனித் திறன்களை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள 15 வார காலப் புதிய படிப்பில் புகைப்பட இதழ்கள், ஊடகச் சட்டம், ஊடக அறநெறிகள் முதலான பல்வேறு தலைப்புகளில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் வகுப்புகள் நடத்தவுள்ளனர்.

ஆவணப்படம்- சிறப்பு பயிற்சி

சுற்றுலாத் துறையில் ஆர்வம் உள்ளவர்கள், பறவைகள், விலங்குகள் வாழும் அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்குச் சென்று இயற்கை அழகை படமெடுக்க விரும்புவர்களுக்குத் தேவையான அனைத்து திறன்களையும், தொழில் நுட்பம் சார்ந்து மேம்படுத்துகின்ற வகையில் புகைப்பட இதழியல் துறை படிப்பு பல்கலைக்கழகப் பேராசிரியர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய கலை, கலாசாரம், சமூக மாற்றத்திற்கான ஆவணப் படங்களை எடுக்க விரும்புவர்களுக்கும் சிறப்புப் பயிற்சிகளும் அளிக்கப்படவுள்ளன. இந்திய அரசயலமைப்பு, ஊடகம் தொடர்பான சட்டங்கள், அறநெறிகள், தொடர்புத்திறன் போன்ற பல்வேறு பயனுள்ள பாடத்திட்டங்களும் ஊடகச் சட்டம் பாடப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.

1600 பேர் விருப்பம்

இப்பாடப் பிரிவுகளில் சேர்ந்து பயில ஆயிரத்து 600க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் விருப்பங்களைத் தெரிவித்துள்ளனர். இம்மாதம் 31ஆம் தேதி வரை மாணவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவுச் செய்து கொள்ளலாம். இது தொடர்பான மேலும் விவரங்களைப் பெற விரும்புவர்கள் பல்கலைக்கழக கல்வி பல்லுாடக ஆராய்ச்சி மையத்தை தொடர்பு கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 1 லட்சம் நபர்களை வேலைக்கு எடுக்கும் காக்னிசண்ட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.