புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு நேற்று (மே.09) கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. தொடர்ந்து, சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் ரங்கசாமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சட்டப்பேரவையிலுள்ள அவரது அலுவலகம் இன்று (மே.10) கிருமி நாசினி கொண்டு சுத்திகரிக்கப்பட்டது. முன்னதாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கரோனா பரிசோதனை செய்துகொண்டு, தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு முதலமைச்சர் ரங்கசாமி கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.