டெல்லியில் கடந்த சில ஆண்டுகளாகவே குளிர்காலங்களில் காற்றின் தரம் மிக மோசமாக பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக குழந்தைகளும் முதியவர்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
அதன்படி இந்தாண்டும் கடந்த சில வாரங்களாகவே டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துவந்தது. குறிப்பாக நவ. 4ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை டெல்லியில் காற்றின் தரம் மிக மிக மோசம் என்ற நிலைக்கு சென்றது.
இந்நிலையில், இன்று டெல்லியில் காற்றின் தரம் மிக மிக மோசம் என்ற நிலையில் இருந்து மிக மோசம் என்ற நிலைக்கு முன்னேறியுள்ளதாக டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. தேசிய தலைநகர் பகுதியில் வடமேற்கு திசையில் வீசிக்கொண்டிருந்த காற்று, தற்போது வடகிழக்கு திசையை நோக்கி வீசத் தொடங்கியதே காற்று மாசு குறைந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.
ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநில விவசாயிகள், விவசாய கழிவுகளை எரிப்பதால் உண்டாகும் புகை காற்றின் திசை மாறியுள்ளதால் தேசிய தலைநகர் பகுதிக்குள் நுழைவது குறைந்துள்ளது.
இதையும் படிங்க: வரலாற்றில் முதல் முறையாக மந்த நிலைக்குள் தள்ளப்பட்ட இந்திய பொருளாதாரம்: ராகுல் காந்தி