ETV Bharat / bharat

உத்தரப் பிரதேச தேர்தல்: ஆறாம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

உத்தரப் பிரதேசத்தில் உள்ள 57 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆறாம் கட்ட வக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

author img

By

Published : Mar 3, 2022, 8:54 AM IST

உத்தரப் பிரதேச தேர்தல்
உத்தரப் பிரதேச தேர்தல்

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏற்கனவே, ஆறு கட்டங்களுக்கான வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், இன்று 57 தொகுதிகளுக்கு ஆறாவது கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போட்டியிடும் கோரக்பூர் உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கோரக்பூர் தொகுதியில் முதலமைச்சர் யோகியை எதிர்த்து பீம் ஆர்மி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் போட்டியிடுகிறார். அத்துடன் மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் போட்டியிடும் தம்குஹி ராஜ் தொகுதிக்கும் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முதலமைச்சர் யோகி தனது தொகுதியில் உள்ள வாக்குப் பதிவு மையத்தில் வாக்களித்தார். இந்த ஆறாம் கட்ட வாக்குப்பதிவில் 2.14 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். 676 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஏழு கட்ட தேர்தல் மார்ச் 10ஆம் தேதி நிறைவடையும் நிலையில் வாக்கு எண்ணிக்கை மார்ச் 13ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் வெளியாகவுள்ளன.

இதையும் படிங்க: ரஷ்யா - உக்ரைன் போர்: 17 ஆயிரம் இந்தியர்கள் வெளியேற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.