ETV Bharat / bharat

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் நாளை வாக்குப் பதிவு! - madhya pradesh election

Madhya Pradesh Election: மத்தியப் பிரதேச மாநிலத்தில் 230 தொகுதிகளுக்கும் சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக 70 தொகுதிகளுக்கும் நாளை (நவ.17) வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2023, 9:54 PM IST

ஹைதரபாத்: 5 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மாநிலம் முழுவதும் 64,523 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 17 ஆயிரம் வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 35,000 வாக்குச் சாவடிகளில் இணையதளம் மூலம் நேரலையில் கண்காணிக்கும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக மாநிலம் முழுவதும் 2,533 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதில், 2,281 ஆண் வேட்பாளர்கள், 252 பெண் வேட்பாளர்கள் மற்றும் ஒரு மூன்றாம் பாலினத்தவர் அடங்குவர். இந்த தேர்தலில் 22 லட்சம் முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் உள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட சோதனை சாவடிகளில் நடைபெற்ற சோதனையில் கடந்த 2018ஆம் ஆண்டை விட மூன்று மடங்கு அதிகமான பணம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மத்தியப் பிரதேசத் தலைமைத் தேர்தல் அதிகாரி அனுபன் ராஜன் தெரிவிக்கும் போது, "மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்த பின்பு மாநிலங்கள் முழுவதும் 2 லட்சத்து 85 ஆயிரம் ஆயுதங்கள் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 800க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள் அமைத்துத் தொடர் சோதனை செய்ததில் 331 கோடி மதிப்பிலான பணம் மதுபானம் மற்றும் இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், 38.49 கோடி பணம், 62.9 கோடி மதுபானம், 92.74 விலை உயர்ந்த பொருட்கள், 121.61 கோடி ஆவணங்கள் மற்றும் 17.2 இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.

இதே போல், சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் கட்டச் சட்டமன்ற தேர்தல் 70 தொகுதிகளுக்கு நாளை (நவ.17) நடைபெறவுள்ளது. மொத்தமாக 22 மாவட்டத்தில் 1 கோடியே 63 லட்சத்து 14 ஆயிரத்து 479 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இரண்டாம் கட்டத் தேர்தலில் 958 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் இதில் 827 ஆண் வேட்பாளர்களும் 130 பெண் வேட்பாளர்களும் மற்றும் ஒரு மூன்றாம் பாலினத்தவர் போட்டியிடுகிறார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 230 தொகுதிகளிலும் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக 70 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவானது நாளை (நவ.17) காலை 7.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. இதற்கான பாதுகாப்புப் பணிகளை இரு மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர் செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உத்தரகாண்ட் சுரங்க விபத்து; விமானப்படையின் இயந்திரங்கள் மூலம் 5வது நாளாக தொடரும் மீட்புப் பணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.