ETV Bharat / bharat

சுதந்திர இந்தியாவில் இப்படி நடக்குமா? உ.பி. காவல் துறை அராஜக போக்கால் கலங்கும் மணவீட்டார் - இந்து- இஸ்லாமிய திருமணம் தடுத்து நிறுத்தம்

இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெறவிருந்த திருமணத்தை, சட்டத்திற்கு புறம்பானது என்ற காரணத்தை காட்டி உத்தரப் பிரதேச காவல் துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

Police stall interfaith marriage in Lucknow

author img

By

Published : Dec 4, 2020, 2:41 PM IST

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமணத்திற்காக கட்டாயமாக மதம் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், லவ் ஜிகாத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கட்டாய மதமாற்ற எதிர்ப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் சில வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருவீட்டார் சம்மதத்துடன் தனது இஸ்லாமிய இளைஞர் ஒருவர் தனது பால்ய கால தோழியை (இந்து மதத்தைச் சார்ந்த) இருவீட்டாரின் சம்மதத்துடன் இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞர் திருமணம் செய்யவிருந்தார். இவர்களது திருமணமானது முதலில் இந்து முறைப்படியும், பின்னர் இஸ்லாமிய முறைப்படியும் நடைபெறவிருந்தது. இவர்களுக்கான திருமண நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் திருமணத்தை சட்டத்திற்கு புறம்பானது எனக் கூறி காவல் துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். காவல் துறையினரின் இந்த நடவடிக்கைகளால், திருமண நிகழ்ச்சியில் குழப்பங்கள் சூழ்ந்தது மட்டுமின்றி, அனைவருக்கும் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.

இந்த திருமண நிகழ்ச்சி குறித்து இந்து மகாசபா மாவட்டத் தலைவர் பிரிஜேஷ் சுக்லா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இவரது புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த காவல் துறையினர் நடைபெறவிருந்த திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து மணப்பெண்ணின் உறவினர் ஒருவர் பேசுகையில், "காவல் துறையின் இந்த நடவடிக்கையால் இருவீட்டில் உள்ளோரும் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளோம். திருமண விழாவிற்கு வந்த விருந்தினர்களுக்கு சமைத்து வைத்துள்ள உணவுப் பொருள்களைக்கூட கொடுக்கமுடியாத நிலைக்கு காவல் துறையினர் எங்களை தள்ளியுள்ளனர். இதுபோன்ற ஒரு சம்பவம் சுதந்திர இந்தியாவில் நடைபெறும் என்று இதுவரை நான் கற்பனைக்கூட செய்ததில்லை" என்கிறார் வருத்தத்துடன்.

காவல் துறையினரின் நடவடிக்கை குறித்து பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு இஸ்லாமிய ஆன்மிகத் தலைவர், "நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகளவு அச்சுறுத்தல் புதிய சட்டத்தால் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. தற்போது அமல்படுத்தப்பட்ட புதிய சட்டத்தின் வாயிலாக உத்தரப் பிரதேசத்தை காவல் துறையினர்தான் ஆட்சி செய்கின்றனர் " எனக் கூறியுள்ளார்.

இந்த திருமண நிகழ்வு குறித்து இருவீட்டாரின் மீதும், கட்டாய மதமாற்ற சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

"குறிப்பிட்ட வயதுடையவர்களுக்கு தங்களது துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால், கட்டாய மதமாற்ற சட்டத்தின் மூலம் இனி காவலர்களே மக்கள் யாருடன் வாழவேண்டும் என்பதை முடிவு செய்வர். இனி நாட்டில் இந்த நடைமுறையே தொடரும். உத்தரப் பிரதேசத்தில் இனி காவலர்களே சட்டத்தை நிர்ணயிக்கும் நிலையை உருவாக்குவார்கள்" என காவல் துறையினரின் நடவடிக்கைகளை கடுமையாகத் தாக்கியுள்ளார் இளம் தொழில்நுட்பவியலாளர் மரூஃப் அலி.

இச்சம்பவம் குறித்து பேசிய தெற்கு மாவட்ட கூடுதல் துணை காவல் ஆணையர் சுரேஷ் சந்திரா ராவத், நாங்கள் திருமண நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு சென்றபோது, இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பின்னர் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெறும் என்றனர். ஆனால், இந்த நிகழ்வுகள் அனைத்தும் மதமாற்ற நிகழ்வுகள் செய்யாமல் நடைபெற்றிருக்காது" என்றார்.

மேலும் பேசிய அவர், "சட்டத்தின்படியே திருமணம் நிறுத்தப்பட்டது. இந்தச் சட்டம் ஒரு மதத்திலிருந்து மற்றொரு நபரை நேரடியாகவோ அல்லது வேறுவிதமாகவோ யாரும் மாற்ற முயற்சிக்கக்கூடாது என்று கூறுகிறது. தவறாக சித்தரித்தல், கட்டாயப்படுத்துதல், தேவையற்ற செல்வாக்கு, வற்புறுத்தல் அல்லது எந்தவொரு மோசடி வழிமுறையிலும், திருமணத்தின் வாயிலாகவும் மக்கள் மதமாற்றத்திற்கு உள்ளாகக்கூடாது. எனவே இந்தத் திருமணம் தடை செய்யப்பட்டது" என்றார்.

இச்சம்பவம் தொடர்பாக பேசிய மணப்பெண்னின் தந்தை, "இங்கு யாரும் கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்தப்படவில்லை. அதுதொடர்பான சிந்தனைகளும் இல்லை. இருகுடும்பத்தினரும் இணைந்து, பரஸ்பர அன்புடனே இந்தத் திருமண நிகழ்வை மேற்கொண்டோம்" என்று கூறினார்.

எது எவ்வாறு இருப்பினும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதால், இரு குடும்பத்தினரும் சட்டத்தின் நிறுத்தப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், இவர்கள் தண்டனைக்கு உள்ளாகும் வாய்ப்பும் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, தங்களது புதிய வாழ்க்கையை இருவீட்டாரின் சம்மதத்துடன் தொடங்கவிருந்த மணமக்கள் இருமாதங்களுக்குப் பிறகு மாவட்ட மாஜிஸ்திரேட் அளிக்கும் உத்தரவின் பேரிலேயே திருமணம் செய்து கொள்ள இயலுமா என்பதை உறுதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: மதமாற்றம் தடுப்பு சட்டம்: பரேலி காவல் துறையின் முதல் வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.