ETV Bharat / bharat

40 பவுன் தங்கை நகை கொள்ளை; வீட்டுப் பணியாளர் மீது சந்தேகம்! - க்ரைம் செய்திகள்

கரோனா காலகட்டத்திற்கு முன் அலமாரியில் வைத்திருந்த நகைகளை அவர் இடையில் பார்க்கவே இல்லை. மேலும், கரோனா காலகட்டத்தில் அவர் தனது வீட்டில் யாரையும் சேர்க்கவில்லை. நாயை பார்த்துக்கொள்ள மைக்கேல்சுதன் மட்டுமே வந்து சென்றுள்ளார்.

police investigate house employee in gold theft case

author img

By

Published : Jan 20, 2021, 2:50 PM IST

புதுச்சேரி: நகை கொள்ளை போன சம்பவத்தில் ஒருவரை பிடித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுவை வெண்ணிலா நகர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நிவர்சி ஜான்சன் (வயது 56) . அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். இருவரும் சென்னையில் பணியாற்றி வருகின்றனர்.

நிவர்சி ஜான்சன் தனது வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். இந்த நாயை பார்த்துக்கொள்வதற்காக கோவிந்தசாலையை சேர்ந்த மைக்கேல்சுதன் என்பவர் மட்டும் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், நிவர்சி ஜான்சன் நேற்று ஒரு விஷேசத்திற்கு செல்வதற்காக நகையை எடுக்க அலமாரியை திறந்துள்ளார். அப்போது அலமாரியில் இருந்த 40 பவுன் தங்க நகை காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். கரோனா காலகட்டத்திற்கு முன் அலமாரியில் வைத்திருந்த நகைகளை அவர் இடையில் பார்க்கவே இல்லை. மேலும், கரோனா காலகட்டத்தில் அவர் தனது வீட்டில் யாரையும் சேர்க்கவில்லை. நாயை பார்த்துக்கொள்ள மைக்கேல்சுதன் மட்டுமே வந்து சென்றுள்ளார்.

எனவே அவர் நகையை திருடியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஒர்லையன்பேட் போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.