ராஜஸ்தான் மாநிலம் கங்கா நகரில் கர்னல் சிங் என்பவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன், இஷான் சிங். இவர்கள் இருவரும் ராஞ்சியில் உள்ள ஒரு பட்டாசு கடையில் தீபாவளி (அக் 24) அன்று பட்டாசு வாங்கச் சென்றுள்ளனர். அப்போது பட்டாசுக்கான ஜிஎஸ்டி பில் தருமாறு கர்னல் சிங் கேட்டுள்ளார்.
ஆனால், வாடிக்கையாளர்களுக்கு ஜிஎஸ்டி பில் கொடுப்பதில்லை என கடையின் உரிமையாளையாளர் விமல் சிங்கானியா தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் முடிவில், கடையின் உரிமையாளர்கள் உள்பட 15 முதல் 20 பேர் கர்னல் சிங் மற்றும் அவரது மகனை இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து கர்னலின் மகன் இஷான் சிங், கோண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதேநேரம் பட்டாசு கடையின் ஊழியர்களில் ஒருவரான ராஜூ முண்டா, அவர்கள் (கர்னல் மற்றும் அவரது மகன்) தள்ளுபடி விலையில் பட்டாசு கேட்கும்போது கடை ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து கடையில் உள்ள சிசிடிவி காட்சி மூலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பட்டியலினத்தவர் நுழைந்ததால் பல ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் கோயில் - திறக்க மறுக்கும் ஆதிக்க சாதியினர்!