ETV Bharat / bharat

கர்நாடக முன்னாள் முதலமைச்சருக்கு எதிராக கருத்துப்பதிவிட்ட காவலர் சஸ்பெண்ட்

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக கருத்துப்பதிவிட்ட காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக முன்னாள் முதலமைச்சருக்கு எதிராக கருத்து பதிவிட்ட காவலர் பணியிடை நீக்கம்

author img

By

Published : Oct 9, 2022, 1:35 PM IST

கர்நாடக மாநிலம், விஜயப்பூர் ஊரக காவல் நிலையத்தில் காவலராக ராஜசேகர கான்புரா என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், 'நீங்கள் (கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா) காவலர்களை திட்டுகிறீர்கள், எஸ்கார்ட் காவலர்களின் துணை இல்லாமல் வீட்டிற்குச்செல்லுங்கள்' எனப் பதிவிட்டிருந்தார். இதற்கு சித்தராமையாவின் தொண்டர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

மேலும் முன்னாள் முதலமைச்சருக்கு எதிராக கருத்து பதிவிட்ட காவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இந்த நிலையில் விஜயப்பூர் எஸ்.பி. ஆனந்த் குமார், காவலர் ராஜசேகர கான்புராவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Bharat Jodo Yatra: ராகுலுடன் கைகோர்த்து ஓடிய சித்தராமையா...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.