ETV Bharat / bharat

விஷ எறும்புகள் படையெடுப்பால் மக்கள் பீதி... கிராமத்தை காலி செய்ய முடிவு...

ஒடிஷாவின் பிரம்மன்சாஹி கிராமத்தில் விஷ எறும்புகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வந்து தாக்குவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். ஏராளமான மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறவும் முடிவு செய்துள்ளனர்.

Poisonous
Poisonous
author img

By

Published : Sep 5, 2022, 7:52 PM IST

புரி: ஒடிஷா மாநிலம் புரி மாவட்டத்தில் உள்ள பிரம்மன்சாஹி கிராமத்தில் கடந்த இரண்டு மாதங்களாக சிவப்பு நிற விஷ எறும்புகள் படைடெடுத்து வருகின்றன. கூட்டம் கூட்டமாக வீடுகளிலும், கொல்லைப்புறங்களிலும் இந்த எறும்புகள் குடிபுகுந்துள்ளன. குறிப்பாக மண் சுவர்களில் அதிகளவு எறும்புகள் காணப்படுகின்றன.

இந்த எறும்புகள் கடிப்பதால், அரிப்பு, வீக்கம் மற்றும் தோல் நோய்களும் ஏற்படுவதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த எறும்புகள் பல்லிகள், தவளைகள், பாம்புகள், பூனைகள், நாய்கள், கால்நடைகளை என விலங்குகளையும் தாக்குகின்றன. இந்த வகையான எறும்புகளை தாங்கள் இதுவரை பார்த்ததில்லை என்றும், கிராமத்தின் அருகில் உள்ள கால்வாயிலிருந்து கூட்டம் கூட்டமாக எறும்புகள் வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இன்று மாவட்ட அதிகாரிகள் குழு கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டது. அண்மையில் ஏற்பட்ட வெள்ளம், எறும்புகள் படையெடுப்புக்கு காரணமாக இருக்கலாம் என்றும், எறும்புகளின் மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது எறும்புகளை அழிக்க பூச்சி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் இந்த எறும்புகள் படையெடுப்பு முடிவுக்கு வரக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். கிராமங்களில் உள்ள மண் சுவர்களுக்குள் எறும்புகள் முகாமிட்டுள்ளதால், பல குடும்பங்கள் கிராமத்தை காலி செய்யும் முடிவுக்கு வந்துள்ளன.

இதையும் படிங்க: லைக்ஸிற்காக ரயிலில் அடிபட்ட இளைஞர்..! : ’ரீல்ஸ்’ தந்த விபரீதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.