உஜ்ஜெயினி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் காசாளராக (கேஷியர்) பணிபுரிந்தவர் அஜய் குமார் ராம். இவர், 2017 ஜூலை முதல் 2019ஆம் ஆண்டு வங்கியில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுவந்தார்.
அதாவது, வாடிக்கையாளர்களின் பணங்களை தனது கணக்கில் வரவு வைத்துள்ளார். அந்த வகையில் ரூ.3 கோடி வரை மோசடி செய்துள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதற்கிடையில், அஜய் குமார் ராம், தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் அவரை பொருளாதார குற்றப்பரிவு காவலர்கள் கைதுசெய்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். கைது செய்யப்பட்ட அஜய் மீது ஊழல் தடுப்பு திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.13 ஆயிரம் கோடி வங்கி மோசடி: கோகுல்நாத் மீது சிபிஐ வழக்குப்பதிவு