அகமதாபாத்: குஜராத் மாநிலம், காந்திநகரில் வசித்து வரும் பிரதமர் மோடியின் தாய் ஹிரபா மோடி, 1923 ஜூன் 18ஆம் தேதி பிறந்தார். . இவர் வருகிற 18ஆம் தேதி, தனது 100ஆவது வயதில் அடியெடுத்து வைக்கவுள்ளார்.
100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அகமதாபாத்தில் உள்ள ஜகன்நாதர் கோவிலில் சிறப்பு அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மோடியின் சகோதரர் பங்கஜ் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் ஹிரபா மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தன்னுடைய தாயை நேரில் சென்று சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் சிறப்பு தொகுப்பு