காந்தி நகர்: குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் கோயிலில், நாளை (ஆகஸ்ட்.20) பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு திட்டங்களை காணொலி வாயிலாகத் திறந்து வைக்கிறார்.
இதில், 47 கோடி ரூபாய் மதிப்பிலான சோம்நாத் கோயில் நடை பாதை, சோம்நாத் கண்காட்சி மையம், கட்டடக்கலை சிற்பங்கள் ஆகியவை திறந்து வைக்கப்படுகின்றன. அத்துடன் 3.5 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்ட பழைய சோம்நாத் கோயில் வளாகமும் திறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, கோயில் வளாகத்தில் கட்டப்பட உள்ள சிவன் பார்வதி கோயிலுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இதன் மதிப்பீடு 30 கோடி ரூபாயாகும். இதில், கட்டடம், கருவறை, மண்டபம் ஆகியவையும் இடம்பெறும்.
இந்த நிகழ்வில் ஒன்றிய சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷண் ரெட்டி, குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானி ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.
சோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான சோம்நாத் கோயில்
சோம்நாத் கோயில், குஜராத் மாநிலத்தின் தென்மேற்குக் கரையில் உள்ள கிர்சோம்நாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் அமைந்துள்ள 12 சோதிர்லிங்க தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
அதில், தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலும் ஒன்று. ராமர் இலங்கை செல்ல, ராமேஸ்வரம் வந்தபோது அங்கு சுயம்பாக இருந்த சிவலிங்கத்தை வணங்கிச் சென்றாகக் கூறப்படுவதால், சோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாக ராமேஸ்வரமும் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: இந்திய பாரா ஒலிம்பிக் வீரர்களுடன் பிரதமர் உரையாடல்