மைசூர்: பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரரான பிரகலாத் மோடி(70), இன்று(டிச.27) பிற்பகலில் தனது குடும்பத்தினருடன் காரில் சென்றுள்ளார். பிரகலாத் மோடி, அவரது மகன் மெகுல் பிரகலாத் மோடி (40), மருமகள் ஜிண்டால் மோடி (35), பேரன் மெனத் மெஹுல் மோடி (6) மற்றும் ஓட்டுநர் என ஐந்து பேர் காரில் பெங்களூரில் இருந்து மைசூர் வழியாக பந்திப்பூர் நோக்கிச் சென்றதாகத் தெரிகிறது.
மைசூர் அருகே கடகோலா என்ற இடத்தில் சென்றபோது, கார் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்தது. இந்த விபத்தில் பிரகலாத் மோடி உள்பட அனைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மைசூர் மாவட்ட போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விபத்தின்போது காரில் இருந்த ஏர் பலூன்கள் உதவியதால், காரில் இருந்தவர்கள் மோசமான காயங்கள் ஏற்படாமல் தப்பித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இந்தித் திணிப்பு கல்வித் துறையின் மறுமலர்ச்சி? மத்திய அமைச்சரை விளாசிய மதுரை எம்.பி!